பக்கம்:அருளாளர்கள்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி 167

பண்ணே னுணக்கான பூசையொரு வடிவிலே

பாவித் திறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப்

பனிமல ரெடுக்க மனமும் நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில்

நானும்என் உளம்நிற்றி நீ நான்கும் பிடும்போ தரைக்கும் பிடாதலால்

நான்பூசை செய்யல் முறையோ

(தாயு. கருணாகரக் கடவுள் : 6)

என்றெல்லாம் அத்துவைதக் கருத்தைப் பாடுவார் போல பாடிச் செல்வதைக் காண முடிகின்றது.

அடுத்து தாயுமானவப் பெருந்தகை நான்கு பாடல்கள் தாண்டிய பிறகு பக்தி மார்க்கத்தின் எல்லையிலே நின்று,

உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள்

ஊற்றென வெதும்பி யூற்ற . ஊசிகாந் தத்தினைக் கண்டணுகல் போலவே

ஒருறவும் உன்னி யுன்னிப் - படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்

பாடியா டிக்கு தித்துப் பனிமதி முகத்திலே நிலவனைய புன்னகை

பரப்பியார்த் தார்த்தெ ழுந்து மடலவிழு மலரனைய கைவிரித் துக்கூப்பி

வானேயவ் வானி லின்ப மழையே மழைத்தாரை வெள்ளமே நீடுழி

வாழியென வாழ்த்தி யேத்துங் - கடல்மடை திறந்தனைய அன்பரன் புக்கெளியை

கன்னெஞ் சனுக்கெ ளியையோ கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்க டவுளே.

(தாயு. கருணாகர-9)