பக்கம்:அருளாளர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 * அருளாளர்கள்



என்று பேசுகிறார். அப்படியானால் பக்தி மார்க்கத்தில் நின்று உருக்கத்தை நாடிப் பாடுகின்ற பாடல்களும் நிரம்ப இருக்கின்றன அவரிடத்தில். எனவே ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் என்ற இரண்டுக்கும் ஒரு பொதுத் தன்மையைக் கண்டவர் இவர் என்று அறியமுடிகின்றது. இவை இரண்டுக்கும் பொதுவான சில தேவைகளும் உண்டு. அதுதான் புலனடக்கம், மன அடக்கம் என்று சொல்லப் பெறும்.

  பொறி புலன்களினால் கட்டுண்டு படுகின்ற அல்லலை எல்லாப் பெரியவர்களும் பாடியிருக்கிறார்கள். மிக இளங் குழந்தையாகிய நம்மாழ்வார் பெருமானே, இந்தப் பொறிபுலன்களை விட்டு என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கி, உன் திருவடியைக் கூட நினைக்காமல் செய்து விட்டாயே, என்ற கருத்தில்,

“வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை
மோதுவித்து உன்திருவடிச் சாதியாவகை நீதடுத்து என்பெறுதி? அந்தோ !”

             - (நாலா : 2746)

என்று பாடுகிறார்.

மற்றொரு குழந்தையாகிய திருஞானசம்பந்தர், திருவலிவலப் பதிகத்தில்,

<poem>“தாயுநீயே தந்தைநீயே சங்கரனே அடியேன்

ஆயுநின் பால்அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்

ஆயமாய் காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்

மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவல மேயவனே".

     (திருமுறை :1,50,7)

இந்தக் கருத்தை அற்புதமாக தாயுமானவப் பெருந்தகை பின்வரும் பாடலில் பேசுகிறார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/179&oldid=1292163" இலிருந்து மீள்விக்கப்பட்டது