பக்கம்:அருளாளர்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 * அருளாளர்கள்



முயற்சியினாலேயே அதனைப் பெற்று விடுதல் என்பது முடியாத காரியம் என்பதை உணர்த்துகிறார்.

ஒரு காலத்தில் இந்த நாட்டில் தோன்றிய பெரியவர்கள் அறிவு பூர்வமாக ஆராய்வதன் மூலமாகவே புலனடக்கம் செய்ய முடியும் என்று கருதினார்கள். அனுபவம் வாய்ந்த தாயுமானவப் பெருந்தகை போன்ற பெருமக்கள் அது இயலாது என்பதை நன்றாக அறிந்தவர்கள் ஆகையினாலேதான் ஆண்டவனை நோக்கி,

பாழான என்மனம் குவியவொரு தந்திரம்

பண்ணுவது உனக் கருமையோ? என்று கேட்கின்றார்.

இனி இந்த அடக்கத்தைப் பெற்றுவிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை மறுபடியும் வற்புறுத்த வருகின்றார். இன்று இருப்பது போலவே அவருடைய காலத்திலும் சித்திகள் செய்கின்றவர்கள் இருந்திருப்பார்கள் போல் இருக்கின்றது. ஏதோ வெறுங் கையில் பழத்தை வர வழைப்பதும், வெறுங்கையிலே விபூதியை வரவழைப்பதும் இன்று செயற்கருஞ்செயலாக அட்டமா சித்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது மிக மிக பைத்தியக்காரத்தனமாகும். இதை நினைந்து பாடு கிறார் தாயுமானவப் பெருந்தகை,

சினமிறக்கக் கற்றாலுஞ் சித்தியெல்லாம் பெற்றாலும்

மனமி றக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே

- (பராபரக்கண்ணி:179)

எத்தனை சித்திகளை நீ செய்தாலும் சரி, “மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன்” என்று இதைச் சொல்வதன் மூலம் ஒரு மாபெரும் உண்மையைத் தாயுமானவப் பெருந்தகை நமக்குத் தெரிவிக்கின்றார். மனஅடக்கம் இல்லாதவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/181&oldid=1285852" இலிருந்து மீள்விக்கப்பட்டது