உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளர்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி 173

நடைபெற்றிருக்கும் என நினைக்க வேண்டி உள்ளது. வரலாற்று அடிப்படையில் பார்த்தாலும் கூட தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டிலுமல்ல, உலகம் முழுவதுமே சமயப் போராட்டம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல. என்று சமயம் தோன்றிற்றோ அன்றே போராட்டமும் தோன்றி இருக்க வேண்டுமென்று நினைக்க வேண்டியிருக்கிறது. காரணம் சமயம் என்பது உணர்வினாலும், அனுபவத்தினாலும், உள்ளத்தினாலும் உணரப்பட வேண்டிய ஒன்று என்பதை விட்டுவிட்டு அறிவினாலே ஆராய்ந்து பார்க்கக் கூடிய ஒன்று என என்று மனிதன் கருத நினைத்தானோ அன்றே போராட்டம் தொடங்கி விட்டது. அறிவினாலே ஆராயப் படும் பொருள் என்றால் அவரவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கேற்ப முடிவுகள் மாறத்தான் செய்யும். முடிவுகள் மாறுவதை ஏனையோர் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆகவே என்னுடையது பெரிது-உன்னுடையது பெரிது என்ற போராட்டம் உலகத்தில் என்றும் நிகழ்ந்து தான் வந்திருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு மூலமாக இருக்கிற வாதப் பிரதிவாதங் கள் இருக்கிறதே. அவற்றைத் தாயுமானவப் பெருந்தகை சாடியதைப் போல இந்த இருபது நூற்றாண்டுகளில் யாரும் சாடியதாகச் சொல்ல முடியாது. (மிக அற்புதமாகப் பேசுகிறார்)

வள்ளுவன் கல்வி என்று ஒரு பெரிய அதிகாரமே வகுத்திருக்கிறான். கல்வி என்பது முகத்திரண்டு கண் என்று பேசுகின்றான். அப்படிப்பட்ட கல்வியை தாயுமானப் பெருந்தகை பேசுகிறார்.

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்

கற்றும்அறி வில்லா தனன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/184&oldid=659510" இலிருந்து மீள்விக்கப்பட்டது