பக்கம்:அருளாளர்கள்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி 175

அறிஞர் ஒருவர் வருவாரேயானால், தமிழில் இப்படி எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று அவரை வெல்ல முயல்வேன். தமிழறிஞர் வருவாரேயானால் கடபுடா என்று இரண்டு வடமொழி சுலோகங்களைச் சொல்லி அவரை விரட்ட முயல்வேன். யாரையும் வெல்லாமல் விரட்டி விடுகின்ற இந்த அறியாமை இருக்கிறதே இது என்ன பயனைத் தரப் போகின்றது? வேதாந்த சித்தாந்த சமரச நிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே என்று பேசுவதோடு நிறுத்தாமல் இன்னும் ஒரு படி மேலே போகிறார்.

மாறுபடு தர்க்கந் தொடுக்கஅறி வார், சாண்

வயிற்றின் பொருட்ட தாக மண்தலமும் விண்தலமும் ஒன்றாகி மனதுழல

மாலாகி நிற்க அறிவார், வேறுபடு வேடங்கள் கொள்ளஅறி வார், ஒன்றை

மெனமெனென் றகம்வே றதாம் வித்தையறி வார் எமைப் போலவே சந்தைபோல்

மெய்ந்நூல் விரிக்க அறிவார், சிறுபுலி போற்சீறி மூச்சைப் பிடித்துவிழி

செக்கச் சிவக்க அறிவார், திரமென்று தந்தம் மதத்தையே தாமதச் செய்கைகொடும் உளற அறிவார், ஆறுசம யங்கள்தொறும் வேறுவே றாகிவிளை

யாடுமனை யாவ ரறிவார் . அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி

ஆனந்த மான பரமே. . - (தாயு. ஆனந்தமானபரம் : 3) இதுகொடுமை. தர்க்கம் செய்வதைத்தான் தெரிந்திருக் கிறார்கள். கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக