பக்கம்:அருளாளர்கள்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


176 அருளாளர்கள்

ஆகாசத்திற்கும், பூமிக்குமாகக் குதிப்பார்கள். மாலாகி என்பது மயக்கமுடையவற்காக, -

ஏதோ ஜபம் பண்ணுவதாக முணுமுணுவென்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் உலகத்தில் அன்றும் உண்டு. இன்றும் உண்டு. வெளியே இருந்து பார்க்கின்ற நாம் நினைக்கின்றோம் அவர்கள் ஜபத்தில் ஈடுபட்டிருக் கிறார்கள் என்று. தாயுமானவப் பெருந்தகை சொல்கிறார். “மொணமொன என்று.அகம் வேறதாம் வித்தை அறிவார்’ அதாவது மனம் எங்கோ இருக்கிறது. வாய் ஜபித்துக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கிற வித்தை அறிவார். சந்தையிலே எப்படி சாமான்களைப் பரப்பி வைத்திருக் கிறார்களோ அதுபோல மெஞ்ஞான நூல்களை எடுத்துப் பேசுவதற்குரியவர்கள் உண்டு. என்ன பிரயோஜனம்? எங்கள் சமயத்திற்கு இணை வேறு சமயமே இல்லை என்று சொல்வார்கள். ஆறு சமயங்கள்தோறும் வேறு வேறாகி விளையாடும் உனை யார் அறிவார்? என்று ஆண்டவனைக் கேட்கிறார். ஐயா, எல்லாச் சமயங் களையும் நீதான் வகுத்தவன் என்பதை மறந்துவிட்டு இந்தக் கூத்து அடிக்கிறார்களே என்று கேட்கிறார். ஆகையினால் தான், - - -

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்

என்று சொல்லிச் செல்கிறார்.

இதற்குமேலே கல்வி என்பது ஒருவிதத்தில் பெரு நன்மை விளைத்தாலும் மற்றொரு விதத்தில் வித்யா கர்வம் என்ற ஒன்றைத் தந்துவிடும் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஆகையினால் இங்கே பேசுகிறார்.

எத்தனை விதங்கள்தான் கற்கினுங் கேட்கினும்என்

இதயமும் ஒடுங்க வில்லை