பக்கம்:அருளாளர்கள்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178 அருளாளர்கள்

என்று பேசுகிறார். அருணகிரியர் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார். அவரைப் பார்த்து,

உனைப்போல் ஒரு சொல் விளம்பினவர் யார்?

என்றால் அவருடைய பாடல்களிலே எந்த ஒரு சொல்லில் ஈடுபட்டார் என்று நினைந்து பார்ப்போமேயானால் அதை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்

இப்பாடலில் மூன்றாவது அடியில் வரும் சும்மா இரு’, ‘சொல் அற’ என்பதைத்தான் ஒருசொல் என்று குறிக்கிறார் தாயுமானவர். சும்மா இரு என்றால் ஏதோ வாயை மூடிக் கொண்டிருப்பது, மெளன விரதம் இருப்பது என்பதன்று. அதை ஒரு நாளும் நம்முடைய பெரியவர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை. சும்மா இருக்கின்றவருடைய மனம் மிக பயங்கரமான முறையிலே வேலை செய்யும். ஆகவே சும்மா இரு என்று மட்டும் அருணகிரியார் சொல்லியிருப்பாரேயானால் அது என் போன்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள இடந்தரும். ஆகையினாலே “சும்மா இரு சொல் அற’ என்றார். சொல் அறுதல் என்றால் மனத்தில் எண்ண ஓட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருளாகும். எண்ணம் எப்படித் தோன்றுகிறது? சொல்லின் மூலமாகத்தான் தோன்றுகிறது. சொல் இல்லை யானால் எண்ணமில்லை. ஆகவே சொல் அற என்று அருணகிரிப் பெருமான் சொல்லும்போது மனத்திலே எண்ணமே இல்லாமல் இருக்கவேண்டும் என்று சொல்லு கின்ற அந்தப்பெரிய நிலையை நினைந்து பார்த்துத்தான் தாயுமானவர்,

ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஒருசொல் விளம்பினர் யார்?