பக்கம்:அருளாளர்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி *179

என்று பேசுகிறார். ஆகவே, சொல்லும் பொருளுமற்றுச் சும்மா இருப்பதற்கே அல்லும் பகலுமெனக் காசை பராபரமே (தாயு.பராபரக்கண்ணி.50) என்று சொல்லும்போது அருணகிரிப் பெருமான் சொல்லிய துணுக்கத்தை நன்றாகத் தாயுமானவப் பெருந்தகை புரிந்து கொண்டார் என்பதை அறிய முடிகிறது. சொல்லும் பொருளும் அற்று சும்மா இருப்பது என்று சொல்லும் போது, இத்தகைய ஆன்மிக வளர்ச்சி யை ஒருவன் அடைய வேண்டுமானால் அதற்கு குருவருள் வேண்டும் என்று இந்தப் பெருமக்கள் நினைத்திருக்கிறார் கள். இவருக்கு மெளன குரு கிடைத்ததுபோல அவரவர் களுக்கு ஒரு குரு கிடைத்தால் அது பயனுடையதாக இருக்கும் என்பதை தாயுமானவப் பெருந்தகை சுட்டிக் காட்டுகிறார்.

ஒருமொழியே பலமொழிக்கும் இடம்கொடுக்கும் வந்த குரு வளவளவென்று பேசவில்லையாம். ஏதோ ஒரு சொல்லைச் சொன்னாராம். அந்த ஒரு சொல்,

“ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த

ஒருமொழியே மலம்ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்

கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்.”

(நினைவொன்று - 2)

பலமொழிக்கும் இடம் கொடுக்கும் இவர் எவ்வளவு நினைந்து பார்த்தாலும் அத்தனைக்கும் அந்த ஒரு சொல் இடங்கொடுத்ததாம். அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும். அந்த ஒரு சொல் மலமாகிய குற்றங்களை ஒழித்ததாம். இவரிடத்தில் ஆணவம், கன்மம், மாயை என்றிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/190&oldid=1291920" இலிருந்து மீள்விக்கப்பட்டது