பக்கம்:அருளாளர்கள்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


180 அருளாளர்கள்

மூன்று குற்றங்களை நீக்கியதாம். அப்படிப்பட்ட அந்த ஒரு சொல், ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த குரு மொழியே மலையிலக்கு, என்று பேசுகிறார். அப்படியானால் மெளனகுரு எந்த ஒரு சொல்லைச் சொல்லியிருப்பார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிய வில்லை.

ஆனந்தக் களிப்பில், அருளால் எவையும்பார் என்றான்-அத்தை அறி யாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன், இருளான பொருள் கண்ட தல்லாற்-கண்ட என்னையுங் கண்டிலன் என்னேடி தோழி.

- (ஆனந்தக் களிப்பு-13)

என்று பாடுகிறார்.

குருவாக வந்தவன் சொன்னான். அருளாலே எதையும் பார் என்று. அருளைக் கொண்டு இறைவ னுடைய அருளை அல்லது குருவருளையே துணையாகக் கொண்டு உலகத்தை நீ பார்க்க வேண்டும் என்று சொன்னானாம். அப்படிப் பார்த்திருந்தால் என்ன தெரிந்திருக்கும் அவனை அல்லாமல் உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்று தெரிந்திருக்கும். அப்படியானால் எண்ணுவதற்கே ஒன்றும் இல்லை, ஏகம் சத் என்று மகாவாக்கியம் பேசுவதுபோல எல்லாம் இறைவன் மயமாக இருக்கின்ற காரணத்தினாலே, இறைவன் ஒருவன் தான்-அப்புறம் ஒன்றுமே இல்லை. அடுத்தபடியாக எண்ணுவதற்கே ஒன்றும் இல்லை. அப்படித்தான் குரு சொன்னாராம். அருளாலே எவையும் பார் என்றார் அப்படியல்லாது நான் தவறு செய்து விட்டேன். “...அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்