பக்கம்:அருளாளர்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி *181

சுட்டி என்றால் நான் என்பது வந்துவிடும். நான் என்பது வந்த பிற்பாடு இது என்ன பொருள். இது என்ன பொருள் என்று எண்ணிக் கொண்டே போனேன். என்ன ஆயிற்று தெரியுமா? '... இருளான பொருள் கண்டதெல்லாம் கண்ட என்னையுங் கண்டிலன் என்னேடி தோழி' இப்படி எண்ணிக்கொண்டே போய் அந்த மயக்கத்தில் நான் என்னையே இழந்துவிடும்படியான இருளிலே நுழையும் படியாயிற்று என்று சொல்லுவாரேயானால் குரு சொல்லிய அந்த ஒரு மொழி, “அருளாலே எவையும் பார்” என்பதாகும். அருள் மூலமாக உலகத்தைப் பார்க்க வேண்டும். என்கிற மொழியாகும்.

ஆக தாயுமானவருடைய நெறியிலே மிக இன்றி யமையாததாக அவர் சொல்லியது மெளனமாகும். சொல் அற இருக்கின்ற மெளனமாகும். சொல் அற இருக்கின்ற மெளனத்தைக் கடைப்பிடிக்கின்றவர்கள் இந்த உலகத்தில் தோன்றிய பிறகு பணிபுரிய வேண்டாமா? அற்புதமாகச் சொல்லுகின்றார்.

எவ்வுயிருந் தன்னுயிர்போல் எண்ணுந் தபோதனர்கள் செவ்வறிவை நாடிமிகச் சிந்தைவைப்ப தெந்நாளே. (எந்நாட்கண்ணி-12)

இப்படிப்பட்ட பெரியவர்களிடத்தில் சேர வேண்டுமாம். இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு,

அன்பர்பணி செய்யவெனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே

(தாயு. பராபரக்கண்ணி 155)

என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/192&oldid=1291922" இலிருந்து மீள்விக்கப்பட்டது