பக்கம்:அருளாளர்கள்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. வள்ளலார் கண்ட வாழ்வு நெறி

வள்ளலார் கண்ட வாழ்க்கை நெறி என்று சொல்லும் போது நம்முடைய மனத்தில் சில சிந்தனைகள் தோன்று கின்றன. ஒவ்வொருவருமே ஒரு வாழ்க்கை நெறியைக் கண்டார்களா என்ற ஐயம் நியாயமானதுதான். உலக வரலாற்றையும், மனித வரலாற்றையும் சிந்திக்கும் போது இந்தத் தலைப்பு மிகப் பொருத்தமானது என்று அறிய முடிகிறது. -

உலகம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் வரை எந்த ஜீவ ராசியும் அதில் தோன்றவில்லை. அதன் பின்பு முதலில் தோன்றியவை நிலையியல் பொருள்களான மரம், செடி, கொடிகளேயாகும். அதன் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஓர் அறிவு உயிராகிய அமிபா போன்ற சிற்றுயிர்கள் தோன்றலாயின. இந்தப் பரிமாண வளர்ச்சி யின் இறுதிக் கட்டத்தில் இருப்பவன் மனிதன் ஆவான். இத்தகைய நெடு வளர்ச்சிக்குக் காரணகர்த்தாவாக ஒன்று இருந்தால் ஒழிய இது நடைபெறாது. அந்தக் காரணகர்த்தாவையே, இறைவன் என்றும் மூலப் பரம்பொருள் என்றும் கூறுகின்றோம். -

மக்களைப் படைத்த இறைவன் அந்தந்த இடங்கள், சூழ்நிலைகள், அவரவர்களுடைய பண்பாடுகள் நாகரிகம் என்பவற்றிற்கேற்ப அந்தப் பகுதிகட்குப் பெரியவர்களை அவ்வப்போது அனுப்பியிருக்கிறான். கீதையிலே பகவான் சொல்லியதாக “யுகே யுகே” தோன்றுகிறேன் என்று உள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் எந்தெந்த இடத்தில் எது