பக்கம்:அருளாளர்கள்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


186 அருளாளர்கள்

சங்க காலம் தொட்டு சைவம், வைணவம் என்ற இரண்டும் வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அந்த சங்க காலத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே தோன்றிய வள்ளற்பெருமான் முதல் பிற்பகுதியில் தோன்றிய பாரதியார் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக வாழ்க்கை நெறியை வகுத்திருக்கின்றார்கள்.

இனி ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்பவர்கள் இந்தச் சமயங்களை அடியொற்றி புதிய வாழ்க்கை நெறியை வகுத்தார்களா என்றால் இல்லை. அவர்கள் சைவம், வைணவம் என்ற இரண்டும் எந்த அளவிலே ஏற்கனவே பழகியிருந்ததோ அதிலுள்ள குறைகளைப் போக்கி பக்தி நெறியை வளர்ப்பதற்குரிய வழிகளை வகுத்தார்களே தவிர புதிய வழி வகுத்தார்கள் என்று சொல்வதற்கில்லை.

ஆனால் வள்ளற்பெருமானைப் பொறுத்தமட்டில் புதிய நெறி வகுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாயிற்று. அதைச் சற்றுத் தெளிவாகக் காண்போமேயானால் அவர் வகுத்த வாழ்க்கை நெறி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

170 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பெருமகனார் சாதாரண, வறுமை நிரம்பிய குடும்பத்தில் தோன்றியவர். அவருடைய தமையனாரைப் பொறுத்த மட்டில் அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த பெளராணிகம் என்ற புராணப்பிரசங்கம் செய்து வாழ்க்கை நடத்துகின்றவர். வள்ளலாரைப் பொறுத்தமட்டில் முறையாக ஆசிரியரை வைத்துக் கல்வி பயின்றதாகத் தெரியவேயில்லை. இன்னும் பார்க்கப் போனால் பள்ளிக்கூடம் சென்று படிக்கவே அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால் பெரிதும் வருத்தம் அடைந்திருக்கிறார் அவரது சகோதரர் என்பதையும் அறிய முடிகிறது. இப்படியே இவன் போய்