பக்கம்:அருளாளர்கள்.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 187

விடுவானேயானால் இவனுடைய பிற்கால வாழ்க்கை எப்படி நடைபெறும் என்று கவலைப்பட்டதாகவும் தெரிகிறது. இவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஐயாயிரம் பாடல்களுக்கு மேலே ஒப்பற்ற பாடல்களை அருளிச் செய்தவராகிய வள்ளற்பெருமான் முறையான கல்வி பயிலவில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். இது முடியுமா என்ற கேள்வி நியாயமானதே. இந்த உலகத்தில் மாபெரும் சமயங்களைத் தோற்றுவித்த பலரைப் பற்றிச் சிந்திப்போமேயானால் முறையான கல்வி பெறாதவர்கள் என்பதை உறுதியாக நாம் அறிந்துகொள்ள முடியும். காரணம் என்னவென்றால் இந்த முறையான கல்வி பெற்று அதனாலே என்ன பயனை அடைய முடியுமோ, அடைய வேண்டுமோ அதனை அவர்கள் உள். உணர்வினாலே அடைந்து விடுகின்றார்கள். இது எப்படி என்று சொல்ல வந்த சேக்கிழார் ஞானசம்பந்தப் பெருமானைப் பற்றிச் சொல்லுவார்.

“உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்”

(பெ.பு-1973) இவை என்று சொல்லுவார். ஆகவே கல்வியினாலே என்ன பயனைப் பெற வேண்டுமோ அந்தப் பயனை, ஞானத்தை அவர்கள் உள் உணர்வினாலும் இறைவ னுடைய திருவருளினாலும் பெற்றுவிடுகிறார்கள்.

வள்ளற்பெருமான், பிற்காலத்தில் மிகப் பெரிய புரட்சியைச் செய்யப் போகின்ற ஒருவர் மிக இளமைக் காலத்தில் மரபு பற்றி, சம்பிரதாயமான வழிபாட்டுமுறை, சம்பிரதாயமான விக்கிரக வழிபாடு, பூஜை முதலியவற்றில் ஈடுபட்டு இருந்தார் என்பதை நினைக்க முடிகின்றது. இப்படித் தொடங்கியவர் மிகப்பெரிய வழியை பிற்காலத் தில் எப்படி வகுக்க முடிந்தது என்றால் அது திருவருள்