பக்கம்:அருளாளர்கள்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 189

ஒருவர் ஏதோ ஒரு குருவை நாடிச் செல்கிறார். பல காலம் சென்ற பிறகு அந்த குரு இவரைத் தண்ணிருக்குள்ளே தலையைப் பிடித்து அமிழ்த்தி விடுகின்றார். இனி மூச்சுத் திணறி உயிர்போய் விடுமோ என்று அஞ்சுகின்ற நிலையிலே இவரை வெளியே எடுத்துப் போடுகிறார். போட்டபின் 'என்ன நினைத்தாய்?’ என்று கேட்கிறார். 'ஒரு நினைவும் இல்லை. எப்போது வெளியே வருவேன் என்ற ஒரு நினைவைத் தவிர வேறு நினைவே இல்லை’ என்றார்.

இதேபோல இறைவனை எப்போது காண்பேன் என்ற எண்ணம் உள் மனத்தில் வருமேயானால் அன்று இறைவனைக் காணமுடியும் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்கிறார்.

அதேபோல பாரதியரைப் பொறுத்த மட்டில் பாண்டிச்சேரிக்குச் சென்ற பிறகு குள்ளச்சாமி, அல்லது மாங்கொட்டைச்சாமி என்ற மகானுடைய, சித்தருடைய உறவு அவருக்குக் கிடைக்கின்றது. அப்பெரியார் பின்வரும் முறையில் உபதேசம் செய்கின்றார். தலையைப் பிடித்து கிணற்றினுள்ளே காட்டுகிறார். அப்படியே தலையை நிமிர்த்தி சூரியனைக் காணுமாறு செய்துவிட்டு, அணித்தே உள்ள குட்டிச் சுவரை சுட்டிக்காட்டி விட்டுப் போய் விடுகிறார், என்றால் இவருடைய ஆதங்கம் எப்படியாவது இறையருளைப் பெற வேண்டும், நேரே அதை தரிசனம் செய்ய வேண்டும் என்ற உள் உணர்வு வலுவாக இருக்கின்ற காலத்தில் அது நடைபெறுகின்றது என்பதை நாம் அறிய முடிகின்றது. அப்படியானால் அது ஏன் தடைப்படுகின்றது? பெரியவர்கள் மாபெரும் காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் ஏனையோரைப் போல கருவி கரணங்களை அதாவது மெய், வாக்கு, மூக்கு, கண், செவி ஆகிய ஐம்புலன்களைப் பெற்றிருந்தால் மாபெரும்