பக்கம்:அருளாளர்கள்.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


198 அருளாளர்கள்

நாட்டில் பரம்பரையாக வருகின்ற சில கோட்பாடு களாகும்.

வள்ளல்பெருமான் 19ஆம் நூற்றாண்டில் தோன்றி யிருக்கலாம். ஆனால் இந்த மரபு, இந்தப் பரம்பரை வலுவாக அவரிடத்தில் ஊறியிருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஒருவேளை யாராவது அப்படித் தவறாக நினைத்து விடுவார்கள் என்பதற்காகத்தான்,

வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட மரபினில்யான் ஒருவன் அன்றோ - (திருஅருட்பா-3803)

என்று பேசுகின்றார். அவர் செய்த செயல்களை எல்லாம் சிந்திக்கும்போது இந்த நாட்டினுடைய பழைய வரலாற்றை வைத்துச் சிந்திப்போமேயானால் பல உண்மைகளை

அறிந்துகொள்ள முடியும்,

இந்த அடிப்படையில் விக்கிரக வழிபாட்டில் இருந்து சக்தி வழிபாடு வரை வளர்ந்த பெருமான் இது அக வளர்ச்சி-இனி புறத்திலே அவருக்கு ஏற்பட்ட மாறுதல் கள் என்ன என்று சிந்திப்போமேயானால் தேட்டிலே மிகுந்த சென்னையில் அவர் வாழ்ந்தார். அவரே வறுமை யுடையவராக வாழ்ந்தார். தினந்தோறும் திருவொற்றி யூருக்கு நடந்து சென்று வழிபட்டார் என்பதை எல்லாம் சிந்திக்கும் போது ஏன் அப்படி நடந்து சென்றார்: நடந்து சென்றால்தான் மக்களோடு தொடர்பு ஏற்படும். நால்வர் பெருமக்கள் கூட எல்லா இடங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டார்கள் என்று இன்று எல்லோரும் பேசுகின்றோம். அறிவோடு ஒரு வினாவைக் கேட்போமே யானால் அதற்கு விடை சொல்ல முடியாது. எல்லா இடங்களிலும் ஒரே இறைவன்தான் இருக்கிறான் என்பதை இவர்கள் அறியாதவர்களா? சிவபெருமானைப் பொறுத்த மட்டில் ஒரே வடிவம்தானே. பெருமாளைப் போல நின்ற