பக்கம்:அருளாளர்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 அருளாளர்கள்

பிற நாட்டாரையும், பிற சமயத்தாரையும் எடுத்துப் பார்த்தால் ஓர் உண்மை விளங்கும். கால, தேச, வர்த்த மானங்களைக் கடந்து அவர்கள் தம் நாகரிகம் அறியாத பிற மக்களிடத்தில் சென்று அவர்களோடு தங்கி, அவர்களிடைத் தம் சமயத்தைப் பரப்புகின்றனர். நம்மைப் பொறுத்தவரை நிலை என்ன? முன்னர்க் கூறியது போல ஏற்கனவே சமயத்தை ஒரளவு அறிந்தவர்களிடம் மட்டுமே சென்று நம் சரக்கை வியாபாரம் செய்கிறோம். அது மட்டுமன்று எத்துணை அளவு பதி, பசு, பாசம் பற்றிப் பேசினாலும் இந்நாளைய தேவைக்கு அவை பயன் படக்கூடிய நிலையில் பேசுகிறோமா என்றால் அதுவும் இல்லை. பிற சமயத்தார்கள் அணுயுகத்திற் கேற்பத் தம் சமயக் கருத்துக்களுக்கு வேற்றுருவம் தந்து பரப்புகின்றனர். இதன் பயன் என்ன? சமயப் பற்றும் ஒரளவு அனுபவமும் உடைய பெரியோர்கட்கும், இளம் சமுதாயத்தினர்க்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. ‘காலத்தை வென்று நிற்பது சைவ சித்தாந்தம் என்றும் காலாதிதப் பழம் பொருள் இறைவன்’ என்றும் கூறு கிறோமே தவிர நம் காலத்தில் நம் கண்ணெதிரில் உள்ள இளைஞர்கட்குக்கூட நாம் அமைதி தேடித்தர முடிய வில்லை. இதனால் நம் சமயம் என்பது வெறும் சடங்கு களாக முடிவதுடன் அதன் தத்துவம் மறக்கப்பட்டுப் பொய்யாய், கனவாய், பழங்கதையாய் மெல்லப் போய்க் கொண்டிருக்கிறது. -

இந்நாளைய உலகம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கூட்டங் கூடிப்பேசுவதால் மட்டும் பயனின்று. இச்சமுதாயம் போகின்ற வேகத்தில் திருமந்திரம் போன்ற சமய நூல்களின் இடம் யாது என்று ஆராய வேண்டியுள்ளது. இது நாள் வரை நாம் நம் சமய நூல்களைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்த முறையை,