பக்கம்:அருளாளர்கள்.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 199

திருக்கோலம், இருந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம் அப்படி ஒன்றுமில்லையே. ஒவ்வொரு ஊரிலும் சென்று வழிபட வேண்டிய தேவை என்ன? ஒரே காரணம்தான். பல ஊர்களுக்கும் செல்வதனால் அங்குள்ள மக்களோடு தொடர்பு கொள்ள முடிந்தது. ஆக மக்கள் தொடர்பு கொள்ளுவதற்காகத்தான் இந்தப் பெரியவர்கள் ஊர் ஊராகச் சென்றார்கள்.

இனி வள்ளலாரைப் பொறுத்தமட்டில் சென்னை யிலிருந்து தினம் திருவொற்றியூருக்கும், கந்த கோட்டத் திற்கும் வருகின்ற காலத்தில் எத்தனையோ வகையான மக்களை அவர் பார்த்திருக்க முடியும்.

பிற்காலத்தில் 6 ஆம் திருமுறையில் பிள்ளைப் பெரு விண்ணப்பம் என்று பாடுகிறார். அந்த பிள்ளைப் பெரு விண்ணப்பம், பிள்ளைச் சிறு விண்ணப்பம் என்ற இரண்டு பகுதிகளும் அவரது சுயசரிதைப் பகுதிகளாகும். அதிலே இளமைக்காலத்திலே தம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அவர் சொல்லும்போது மிக ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போமேயானால் அவருடைய வாழ்க்கைத் தடத்தை மாற்றி வேறு திசையில் திருப்பியது எது என்று தெரிந்துகொள்ள முடியும். இரண்டொரு பாடல்களை இங்கே பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்.என். நேர்உறக் கண்டுளந் துடித்தேன் ஈட்டின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர்

தமைக்கண்டே இளைத்தேன் 8.

(திருஅருட்பா-3471)