உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளர்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204 * அருளாளர்கள்



மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்

வருத்தத்தை ஒரு சிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறச் கேட்டும்

கணமும் நான் சகித்திட மாட்டேன்.

- (திருஅருட்பா-3408)

என்று பாடுகிறார். சில சமயங்களிலே சில கொடுமைகளை நாம் கண்ணால் பார்த்தால் சகிக்க முடியாததாக இருக்கும். ஆனால் அதையே பிறர் சொல்லக் கேட்டால் செய்தித்தாளில் படித்தால் நம்முடைய மனத்தில் அத்தகைய துன்பம் ஏற்படுவதில்லை. இது சாதாரண மக்களைப் பொறுத்த மட்டில் உண்மை. ஆனால் இந்த மகானைப் பொறுத்தமட்டில்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக்கேட்டும்

கணமும் நான் சகித்திட மாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால்

இசைத்தபோது இசைத்த போதெல்லாம்

நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும் நல்வரந்தான்

நல்குதல் எனக்கிச்சை எந்தாய்

- (திருஅருட்பா-3408) என்கிறார். என்றால் பெருமானே இந்தத் துயரத்தைக் கண்டு நான் போக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்தத் துயரத்தை நானும் ஏற்று அனுபவிக்க வேண்டும். ஒருபடி மேலே சென்று வள்ளற்பெருமான் என்ன செய்கின்றார்? இந்த உயிர்கள் படுகின்ற துன்பத்தை நானும் ஏறெட்டுக் கொண்டு அனுபவிக்கிறேன் என்று சொன்னால் அது ஓரளவு இயலாமையை அறிவித்துவிடும். ஆதலினால் தான் ஆண்டவனிடம் ஒரு வரம் தர வேண்டும் எனக் கேட்கிறார். யார் யார் துயரத்தை அனுபவிக்கின்றார்களோ, அவர்களுடைய துன்பத்தை நான் போக்க வேண்டும், அதற்குரிய வரம் எனக்கு அருளல் வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/215&oldid=1291993" இலிருந்து மீள்விக்கப்பட்டது