பக்கம்:அருளாளர்கள்.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 205

என்கிறார். நல்க வேண்டும் என்று கேட்கும்போது, வள்ளலார் வகுத்த வாழ்க்கை நெறி எப்படி புதிய தடத்திலே செல்கின்றது என்பதை நாம் காண முடிகிறது.

வள்ளுவன் காலத்திலே இருந்து மனுநீதிச் சோழன் வரையிலே இந்த ஒன்றைத்தான் அறிந்திருக்கிறோம். பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தைப் போக்க முயலவேண்டும். போக்க முடியவில்லையானால் அதை ஏறெட்டுக்கொண்டு அனுபவிக்க வேண்டும் என்று வள்ளுவன் கூறினான். ஒருபடி மேலே சென்ற வள்ளற் பெருமான் இறைவனிடத்தில் முறையிடுகின்றார். 'ஐயா இந்தத் துயரத்தைக் கண்டு, கேட்டு இவ்வினாக்களுக்கு நம்மைப் பொறுத்தமட்டில் அதை நீ ஏன் பார்க்கிறாய், அதை ஏன் கேட்கிறாய்? கண்ணையும் காதையும் மூடிக் கொள்வது தானே என்று எளிதாக விடை கூறிவிடுவோம். என்னால் மேலே நடந்து செல்ல முடியவில்லை.'

நாம்கூட இன்றைக்கு சமுதாயத்தில் பார்க்கின்றோம். அந்தக் கண்றாவியை ஏன் பார்க்கின்றீர்கள்? பேசாமல் போய்விடுங்கள் என்று சொல்வதை கேட்கிறோம். ஆகவே இதைக் கண்டபோது ஒதுங்கிப் போகின்ற முறைதான் சாதாரண மக்களுக்குரியது. ஆனால் மகான்கள் அப்படிச் செய்வதில்லை. அதற்குப் பதிலாக தாங்கள் யாரிடத்தில் முறையிட வேண்டுமோ அந்த இறைவனிடத்தில் முறையிடுகின்றார்கள். முறையிட்டு என்ன கேட்கின்றார்கள்? தனக்கென்று ஒரு பயனை ஒரு காலத்திலும் இவர்கள் கேட்டதேயில்லை. பிற உயிர்களுக்காக இந்த வரபலம் தமக்கு வேண்டுமென்று நினைக்கின்றார்கள். வரபலத்தினாலே தாம் வீடு பேற்றை அடைய வேண்டுமென்று நினைப்பது ஒருவகை. அப்படி வாழ்ந்தவர்களும் உண்டு. ஆனால் இவர்கள் அவர்களைவிடப் பலபடி மேலே போனவர்கள். ஆகையினாலே இந்த வரத்தைப்பெற்று