பக்கம்:அருளாளர்கள்.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


208 அருளாளர்கள்

என்று புறநானூறு பேசும். மனித குலத்திலே ஒப்பற்ற மகாத்மாவாக இருப்பவன் யார் என்றால் தனக்கென வாழா பிறர்க்குரியாளனாக, இருபத்துநான்கு மணி நேரமும் பிறருக்காக வாழ்கின்றவனைத்தான் இந்தத் தமிழச் சாதி போற்றிற்று. அப்படி பிறருக்காக வாழ்ந்தவர் கள் கூட ஓர் அளவில் நின்றுவிடுகிறார்கள். அதற்குமேல் ஒருபடிசென்று ஆண்டவனைப் பார்த்து இந்தத் துன்பத்தைப் போக்க வேண்டுமென்று கேட்கின்றனர் ஞானசம்பந்தரைப் போன்றவர்கள். ஏதோ ஒரு பெண் $y இழந்து வருந்துகிறார் என்றால் ஆண்டவனிடம் சென்று, -

சடையா யெனுமால் சரண்நி யெனுமால் விடையா யெனமால் வெருவா விழுமால் என்று கேட்கின்றார். அந்தத் துன்பத்தைப் போக்க வேண்டுமென்று ஞானசம்பந்தர் வேண்டுகிறார். ஏழாம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றண்டில் ஏற்பட்ட வளர்ச்சி வள்ளற்பெருமானின் இந்த அற்புதமான பாடலில் தெரிகின்றது. ஒவ்வொன்றுக்கும் இறைவனிடத்தில் சென்று அவர்களுடைய துன்பத்தைப் போக்க வேண்டுமென்று மன்றாடுவதைக் காட்டிலும் - அதிகார பத்திரம் என்று சொல்கிறோமே அதுபோல எனக்கு ஒரு அதிகார பத்திரம் தந்துவிடு ஐயா என்று ஆண்டவனைப் பார்த்துக் கேட்கின்றார். - -

ஆண்டவனே அண்டகோடிகளை எல்லாம் படைத்துக் காக்கின்ற உனக்கு எத்தனையோ பணிகள் இருக்கும். இந்தச் சிறு பணிக்கு என்னை அதிகாரி ஆக்கிவிடு. உன்னுடைய திருவருள் பலத்தால் இங்கே f அகங்காரம் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது)