பக்கம்:அருளாளர்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 209

நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோதல்லாம்

நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும் நல்வரந்தான்நல்குதல்.

உன் திருவருள் வன்மையினாலே நினைத்தபோதெல்லாம் இந்தத் துன்பத்தைப் போக்கக் கூடிய வர பலம் வேண்டும் என்று கேட்கின்றார் என்றால் வள்ளலார் வகுத்த வாழ்க்கை நெறியில் குறிப்பாக புதிய ஒரு கட்டத்தை இங்கே காணுகின்றோம்.

இதற்கு அடுத்தபடியாக மக்களிடத்தில் எத்தகைய குணக்கேடுகள் இருந்தன என்பதை இருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்ற நாம் மட்டுமல்ல 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தப் பெருமகனாரும் அறிந்திருந்தார் என்பதை இந்தப் பாடல் அறிவுறுத்துகின்றது.

நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை

நண்ணிடா அரையரை நாளும் கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக்

கேடரைப் பொய்யலால் கிளத்தாப் படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம்

பயந்தனன் சுத்தசன் மார்க்கம் விடுநிலை உலக நடை எலாங்கண்டே

வெருவினேன் வெருவினேன் எந்தாய். (திருஅருட்பா-3474) சிற்றதிகாரி என்றால் குட்டி அதிகாரிகள். அவர்களிடத்தில் நடுநிலை இல்லை - அவர்கள் கையில் அதிகாரம் இருக்கிறது. அதிகாரம் அதனையுடையவனை அழிக்கும்; முழு அதிகாரம் முழுவதுமாக அழித்துவிடும் என்று ஆக்டன் பிரபு சொன்னதுபோல நடுநிலை இல்லாக் கூட்டத்தார் கருணை என்பதே இல்லாதவர்கள்-இவர்கள் கையில் சிற்றதிகாரம் கிடைத்துவிடுமேயானால் சமுதாயம் படுகின்ற பாடு கொஞ்சநஞ்சம் அன்று. இருபதாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/220&oldid=1292012" இலிருந்து மீள்விக்கப்பட்டது