பக்கம்:அருளாளர்கள்.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


212 அருளாளர்கள்

செம்மைபடுவதற்காக எழுதப்பெற்ற கைகாட்டி மரங் களாகும். உணர்வு மூலம் அடையப்பட வேண்டிய இறை அனுபவத்தை சாத்திரங்கள் சடங்குகள் என்ற கைகாட்டி மரங்கள் என்றும் தரமாட்டா. வள்ளலாருக்கு 1800 ஆண்டுகள் முன்னர் தோன்றிய நாவரசுப் பெருமான் இவற்றை கடுமையாகச் சாடுகிறார். “சாத்திரம் பலபேகம்சழக்கர்காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்

(திருமுறை-5,60.3)

என்றும்,

st


பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கொண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே

. . (திருமுறை-590,8)

என்றும், - . . . -

வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்யில் என் நீதிநூல் பல நித்தம் பயிற்றில் என் -

(திருமுறை-5,994)

என்றும், r

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்

- (திருமுறை-5,992) என்றும் பாடிச் செல்வது ஆறாம் நூற்றாண்டில் கூட இந்தச் சாத்திரங்களும் பைத்தியக்கார நம்பிக்கைகளும் தமிழ் மக்களை திசை மாற்றிவிட்டன என்பதை அறிய முடிகிறது. அன்று தொடங்கிய இந்தத் திசைத் திருப்பும் படலம் இன்றும் நம்மிடையே இருந்து வருகின்றது என்பதை நாம் காண்கிறோம். நம் காலத்தில் வாழ்ந்தவரும்