பக்கம்:அருளாளர்கள்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 215

இந்த நெறியினில் உள்ள சூது இருக்கிறதே-அதாவது வெறும் கார்மிகம் என்ற கடமைகளை அல்லது சில கிரியைகளைச் செய்கின்ற இவற்றையே வழிபாட்டுமுறை என்று நினைத்துவிட்டார்கள். இறைவனை வழிபடுவதற்கு இவை வழிகளே தவிர இவையே அனைத்தும் என்று நினைக்கின்ற நினைவு தவறு. ஆனால் அப்படி நினைத்தவர்கள் உண்டு. தாருகாவனத்து முனிவர்களைப் பொறுத்த மட்டில் கார்மிகள். ஆகையினாலே இந்தக் கடமைகளைச் செய்தால் அதுவே பயன்களைத் தந்து விடும். இறைவன் என்ற ஒருத்தன் தேவையே இல்லை என்று சொல்லுகின்ற அளவுக்கு வளர்ந்துவிட்ட இந்தச் சமுதாயம் 19ஆம் நூற்றாண்டைப் பொறுத்தமட்டிலும் வேதாந்திகள் ஒருபுறம்-சித்தாந்திகள் ஒருபுறம்-இஸ்லாமி யர்கள் ஒருபுறம் - கிறிஸ்தவர்கள் ஒருபுறம் - இப்படிப் போராட்டம் பல்கி வளர்ந்துவிட்ட நிலையில் வள்ளற் பெருமான் வருகின்றார். இந்து சமயத்தைப் பொறுத்த மட்டில் கிரியைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போமேயானால் பிற சமயங்கள் நம்மை அழித்து விடும் என்பதை அவர் தம் நுண்மையான மதியினால் கண்டுபிடித்து விடுகின்றார். விக்கிரக வழிபாட்டின் அடிப்படையை மீறாமல் பல்வேறு சிறு தெய்வ வணக்கங்கள் வளர்ந்துவிட்ட நிலை - அப்படிப்பட்ட சமுதாயம் எளிதாக பிற சமயங்களுடைய தாக்குதலுக்கு இரையாகிவிடும். ஆகவேதான் சிறு தெய்வ வணக்கங் களைச் சாடுகிறார். பலியிடுகின்றவர்களைச் சாடுகின்றார், இந்தக் கிரியைகள் செய்கின்றவர்களை எல்லாம் சாடுகின்றார்.

சமுதாயத்தைப் பொறுத்த மட்டில் என்ன நினைத்தார்? மறந்துவிட்டாரா? இல்லை. அற்புதமாகப் பாடுவார். -