பக்கம்:அருளாளர்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 * அருளாளர்கள்



அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் - திருஅருட்யா-4079) என்று சொல்லுகின்ற பாடல். அடுத்தபடியாக அத்தனை பாடல்களையும் ஒன்றாக இணைக்கின்ற பாடல்,

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தை மிக விழைந்த தாலோ. -

(திருஅருட்யா-5297)

என்று சொல்கிறார். ஆகவே எத்துணையும் பேதமுறாது நடப்பதுதான் மனித சமுதாயத்திற்குத் தேவை என்பதைச் சொல்கிறார்.

19ஆம் நூற்றாண்டில் இவரை அடுத்து வந்த பாரதியும் இதே கனவைக் காணுகின்றார் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

நாட்டுமக்கள் நலமுற்று வாழவும் நானி லத்தவர் மேனிலை எய்தவம் (பராசக்தி-3) இந்த இரண்டு கருத்துக்களும் வள்ளற்பெருமான் கருத்தோடு ஒன்றியிருப்பதைக் காணுகின்றோம்.

சில தத்துவங்களை அடிப்படையாக் வைத்து கதைகள் இயற்றியிருப்பார்கள். ஓங்கார வடிவினனாகிய விநாயகப் பெருமானைக் கூட ஏதோ போகின்ற யானையின் கழுத்தை வெட்டிக்கொண்டு வந்து வைத்தார்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/227&oldid=1292381" இலிருந்து மீள்விக்கப்பட்டது