218 * அருளாளர்கள்
நினைந்து பார்த்து இவற்றுக்கெல்லாம் ஒரு பொதுத் தன்மை இருக்கிறதா, இவற்றை ஒருங்கிணைக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றார். எல்லாச் சமயங் களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இவருக்கு முன்னர் ஒரு பெரியார் ஈடுபட்டார். அவர் இவருக்கு முன்னர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவப் பெருந்தகை. அக்காலத்திலிருந்த வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய இரண்டையும் மட்டுமே ஒருங்கிணைக்க முயன்று,
வேதாந்த சித்தாந்த சமரச நன்நிலை பெற்ற, வித்தகச் சித்தர்கணமே
என்று பாடினார். இனி வள்ளற்பெருமான் தாயுமான வர்க்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டு வருவத னால், அவருடைய காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த சமயங்களும் இங்கு நிலைபெற்றுவிட்ட காரணத் தினால், அவற்றையும் ஒருங்கிணைக்க முயன்றார். அந்த முயற்சியின் பயன் அற்புதமாகக் கிடைக்கின்றது.
எல்லாச் சமயங்களிலும் சொல்லப்படுகின்ற சடங்கு களையெல்லாம் தள்ளிவிட்டு அடிப்படைத் தத்துவத்தைப் பார்ப்போமேயானால் ஓர் உண்மை விளங்கும். தாயுமானவர் சொல்லுவார்,
“வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா
(தாயு:கல்லா-25)
என்ற அந்தத் தாயுமானவப் பெருந்தகையின் கருத்தை வாங்கிக் கொண்ட வள்ளற்பெருமான் ஒரு முடிவுக்கு வருகின்றார். எல்லாச் சமயவாதிகளும் ஒன்றை ஒத்துக் கொள்கிறார்கள். அவர்களால் இறைவன் என்று குறிக்கப்