பக்கம்:அருளாளர்கள்.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சித்த யோகசுவாமிகள்

இந்த நாட்டைப் பொறுத்தவரை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக சராசரி மனிதரிலும் பன்மடங்கு உயர்ந்து நின்ற மகாத்மாக்கள் பலருண்டு. ஒரு சிலர் பாடல்கள் மூலம் தாம் யாரென்பதை உலகிற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். திருமூலர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் போன்றவர்கள் தம் பாடல்கள் மூலம் மக்கள் சமுதாயத்திற்கு வழி காட்டியவர்கள் ஆவார்கள். இதன் எதிராக வேறுபல சித்தர்கள் தாங்கள் வாழ்கின்ற காலத்தில் தம்மை வந்தடையும் மக்களின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு வாழ வழி செய்தவர்கள் ஆவார்கள்.

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் வாழ்ந்து 1975 வாக்கில் வீடுபேறடைந்தவர் இச்சுவாமிகள். இவர் ஒரு தனிப்பட்ட இடத்தில், சிறிய குடிசையொன்றை அமைத்துக் கொண்டு அதனுள் இருந்து வந்தார். அந்தக் குடிசைக்குள் நுழைய வேண்டுமானால் யாராக இருந்தாலும் குனிந்து இடுப்பை வளைத்துக் கொண்டுதான் உள்ளே செல்லமுடியும். மீண்டும் வெளியே செல்வதும் இதே முறையில்தான். அந்த நாட்டை ஆண்ட பிரதமமந்திரி முதல் ஆங்கிலேயர்வரை மிகப்பலர் சுவாமிகளிடம் அளவிலாத அன்பு பூண்டு வாழ்ந்தனர். சிங்களவர், இஸ்லாமியர், தமிழர், ஆங்கிலேயர்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி சுவாமிகளிடம் ஒவ்வொரு நாள் மாலையும் மக்கட்கூட்டம் திரண்டு நிற்கும். குடிசைக்குள் அதிகமாக நின்றால் பதினைந்து அல்லது இருபதுபேர்தான் நிற்கமுடியும். இவ்வாறு நிற்பவர்கள் தம்