பக்கம்:அருளாளர்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்த யோகசுவாமிகள் 233

சிறீகாந்தா நம்ப மறுத்து விட்டார். “அ. ச. ஐயா! நாம் மூன்றுபேரும் சுவாமிகளிடம் ஒரு மணிநேரம் இருந்ததையும் அவரது பொன்மொழிகளைக் கேட்டதையும் நன்றாக அறிவோம். "நமக்கென்ன வாகனமா இருக்கிறது. அந்த மடையனுக்குத் தான் மயிலிருக்கிறது என்று கூறியது நினைவில்லையா?" என்று கேட்டார். எவ்வளவு சொல்லியும் நண்பர் சிறீகாந்தா படச்சுருளை நம்பத் தயாராக இல்லை. அரசுப் பணியாளர்கள். ஏதோ தவறு செய்து விட்டார்களென்றே உறுதியாக நம்பினார். இந்நிலையில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஐந்து நாள் சொற்பொழிவு முடிந்ததும் கொழும்பிலிருந்து நேரே சென்னை வருவதற்கு என்னிடம் பயணச் சீட்டிருந்தாலும் அதை மாற்றி யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் தங்கிச் செல்ல முடிவு செய்தேன். அன்று கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் கதிர்காமம் சென்று மயில்வாகன முருகனையும் மானுட வடிவில் யோகர் சுவாமிகள் என்ற பெயரில் இருந்த முருகனையும் கண்டவர்கள் ஆவர். சுவாமிகளங்கு பேசியதை இவர்களனைவரும் நேரே கேட்டவர்களாதலால் அவர்கள் என்னை நம்பத் தயாராகவில்லை.

இந்த நிலையில் என் பணி முடிந்தவுடன் ஆறாம் நாள் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்தேன். விமான நிலையத்திற்கு வந்த சிறீகாந்தா இதுபற்றி அவசரமாக என்னுடன் பேசவிரும்பியதால் ஒட்டுநரை விட்டு விட்டு தானே வண்டி ஓட்டி வந்திருந்தார். பலாவி விமான நிலையத்திலிருந்து கலெக்டர் பங்களா செல்லும்வரையில் நடந்தவற்றையெல்லாம் கூறினேன். நண்பர் சிறீகாந்தா அவர்கள் உறுதியாக அந்தச் சினிமாப் படம் பழையபடம் என்ற முடிவிலிருந்து மாறவேயில்லை. அன்றுமாலை ஒரு மணியளவில், நாங்கள் மூவரும் சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றோம். விழுந்து வணங்கியவுடன் சுவாமிகள் “பொடியா! நீ ஏன் பட்டணம் போகாமல் இங்கே

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/244&oldid=1292332" இலிருந்து மீள்விக்கப்பட்டது