பக்கம்:அருளாளர்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 * அருளாளர்கள்


கடுகளவு தம்முடைய திருவாயில் போட்டுக் கொண்டு எஞ்சியவற்றை உருண்டைகளாக உருட்டி எம்மூவர் இலைகளிலும் போட்டு உண்ணுமாறு பணித்தார்கள். இவை முடித்த பிறகு திடீரென்று, “டேய் மகாதேவா! நீ என்ன செய்யப் போகிறாய் நாளைக்கு?" என்றார்கள். அவர் தெ. பொ.மீயும், தானும் மறுநாட்காலை விமானத்தில் சென்னை செல்லப் போவதாகக் கூறினார் கள். நான் கொழும்பு செல்லப் போவதாகக் கூறினேன். சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “அடே பொடியா, இவர்கள் இருவரும் பறவை மாதிரி கைகளை இறக்கையாக பரப்பிக்கொண்டு பறக்கப் போகிறார்கள் தெரியுமா?"என்றார்கள். எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது. இவர்களைப் போக வேண்டாமென்று சுவாமிகள் கூறுகின்றார்களா என்ற சந்தேகம். சுவாமி களின் எதிரே வருகின்ற பெரியவர்கள் பிரதம மந்திரி யிலிருந்து சாதாரண மனிதர் வரை யாரும் பேசுவ தில்லை. தொடக்கத்திலிருந்தே அவர்கள் எதிரே பேசும் உரிமையை எனக்கு வழங்கியிருந்தார்கள். நான் பேசாது இருந்தாற்கூட, “டேய் பொடியா! ஏன் சும்மா இருக் கிறாய்? ஏதாவது சொல்"என்றார்கள். அந்த உரிமையை வைத்துக் கொண்டு, “இப்பொழுது இவர்கள் பயணத்தை நிறுத்தி விடட்டுமா?"என்று கேட்டேன். சுவாமிகள் சிரித்துக் கொண்டு “அவர்கள் போவதை யோகன் ஏன் நிறுத்த வேண்டும். பறவை போலப் பறப்பார்கள்" என்று கூறினார்கள். சுவாமிகளை விட்டு வரும்போது நடுநிசி ஆகிவிட்டது. நடந்தவற்றைக் கூறியவுடன் அமைச்சர் நடேசனார், இவர்களைப் போகவேண்டாமென்று எவ்வளவோ கூறிப் பார்த்தார். இருவரும் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் மறுநாட்காலை ஏழேகால் மணிக்கு இவர்கள் இருவரையும் வழியனுப்ப அமைச்சரும் நானும் சென்றோம். இருவரும் விமானத்தில் ஏறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/247&oldid=1292057" இலிருந்து மீள்விக்கப்பட்டது