பக்கம்:அருளாளர்கள்.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சித்த யோகசுவாமிகள் 237

அமர்ந்து விட்டனர். ஒடு பாதையின் தொடக்கத்திற்குச் சென்ற விமானம் l J (o) முறை விசிறிகளையும் சுழலவிட்டுக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அது ‘டக்கோட்டா விமானம், சிறிது நேரத்துக் கெல்லாம் ஒலிபெருக்கியில் பின்வருமாறு பேசப்பட்டது. “விமானம் பழுதடைந்து விட்டதால் இன்று சென்னை செல்லும் வாய்ப்பு இல்லை. நாளை இதே நேரத்திற்கு இதே பயணச்சீட்டுகளுடன் பயணிகள் வரலாம்’ விமானத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தார்கள். தெ. பொ. மீயும், மகாதேவனும் கீழிறங்கினார்கள். அமைச்சர் நடேசனுக்கு

ஆனந்தம், மகாதேவனுக்கு வருத்தம். வழக்கம்போல் அன்று மாலை சுவாமிகளைக் காணச் சென்றோம். சுவாமிகள் சிரித்துக்கொண்டே, “என்னடா

மகாதேவா இறக்கையை விரித்துப் பறக்கவில்லையோ!’ என்றார்கள். மகாதேவன் அவர்கள் கண்ணிர் ததும்ப விழுந்து வணங்கிவிட்டு தான் அவசரப்பட்ட காரணம் கூறினார். “அன்று சென்னை போயிருந்தால் நான் இரவு டில்லி சென்று (T.W.A.) விமானம் மூலம் ஹவாய்த் தீவில் (Hawaii Island) z sirgir eggsarggyajGG (Honolulu) Gergbeo வேண்டும். அதற்கு மறுநாள் அங்கு நடைபெறப் போகும் அகில ‍_ வேதாந்த மகாநாட்டிற்கு நான் தலைமை வகிக்க வேண்டும். எல்லாம் கெட்டுவிட்டது” என்று வருந்தினார். அதைக் கேட்ட சுவாமிகள்,

“கவலைவேண்டாம் மகனே. இம் மகாநாட்டை பதினைந்து நாள் தள்ளிப் போட்டு விட்டார்கள். நீ அமைதியாகச் சென்று தலைமை ஏற்று நடத்தலாம்” என்று கூறினார்கள். சுவாமிகளிடம்

விடை பெற்று வந்து நடேசன் வீட்டில் தங்கியபோது மகாதேவன் கூறிய வார்த்தைகள் அவர் துயரத்தை எடுத்துக் காட்டின. “இந்த மகாநாடுகள், ஒரு வருஷத்திற்கு முன்பே அட்டவணை போட்டுத் தயாரிக்கப்