பக்கம்:அருளாளர்கள்.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


238 அருளாளர்கள்

பட்டவையாகும். உலகம் முழுவதிலிருந்தும் LJ3ff வருவார்கள். ஆகையால் இரண்டுநாள் முன்னர் அதை மாற்றுவது இயலாத காரியம் என்று கூறி வருந்தினார். மறுநாள் அவர்கள் இருவரும் சென்னை சென்றனர். நான் கொழும்பு சென்று பதினைந்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்து ஒருமாதம் கழிந்தபின் டாக்டர் மகாதேவனைச் சந்தித்தேன். நாத்தழுதழுக்க, “சுவாமிகள் அவர்கள் எவ்வளவு பெரிய சித்தர் என்பதை அனுபவித்து விட்டேன். அங்கே விமானம் தடைப்பட்ட அதே நேரத்தில் சென்னையில் என் வீட்டிற்கு ஒரு தந்தி வந்திருந்தது. பதினைந்து நாட்கள் மகாநாடு பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டதென்றும், பதினாறா வது நாள் விழாத் தொடங்குமென்றும் தந்தியில் அறிவித்து இருந்தார்கள். அப்படியே பதினாறாவதுநாள் தொடங்கிய விழாவில் தலைமையேற்று என்பணி முடித்து வந்து விட்டேன்’ என்று கூறினார்கள். யோகர் சுவாமிகள் என்ற சித்தரிடம் நாங்கள் அனுபவித்த இந்த நிகழ்ச்சி அவர் யாரென்பதை எடுத்துக் காட்ட உதவும்.

மேலே கூறிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் உடனிருந்து சுவாமிகளின் யோகசித்தியையும், பக்தர்களுக்கு அருளு கின்ற திறத்தையும் என்னால் காண முடிந்தது. இனி நான் சொல்லப்போகும் நிகழ்ச்சி எனக்கு நேரடியாக நேர்ந்த அனுபவமாகும். சுவாமிகள் இருக்கும் காலத்திலேயே இதுபற்றி எழுதவேண்டுமென்று ஈழகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகள் வேண்டியும் மகானின் உத்தர வில்லாமல் அதைச் செய்ய முடியாதென்று கூறிவிட்டேன். இப்போது அதனை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது அப்பெருமகனார் சித்தியடைந்து விட்டார். இரண்டாவது என்னுடைய வயதும் எண்பதைக் கடந்து விட்ட காரணத்தால் பின்னர் வரும் சமுதாயம் எத்தகைய அருளாளர்களை இந்தத் தமிழினம்