பக்கம்:அருளாளர்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 * அருளாளர்கள்



அவரிடம் தந்தார். ஏதோ அவருக்கு அந்த டிக்கட்டு என்று நினைத்தேன். அப்பெருமகனார் டிக்கட்டை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை செல்வதற்கு என் பெயரிலும், அப்பணியாளர் பெயரிலும் இரண்டு டிக்கட்டுகள் இருந்தன. ஒன்றும் புரியாமல் திகைக்கும் என்னைப் பார்த்து பின்வருமாறு பேசினார். “அ. ச. ஐயா! இங்கு செய்த சோதனையிலேயே தாங்கள் எழுதிக் காட்டியது உண்மை என்பதைத் தெரிந்து கொண்டேன். இதற்கு இதுவரை மருத்துவ உலகம் ஒன்றும் செய்யமுடியவில்லை. கோடிக்கு ஒருவருக்கு இது வரலாம். வந்து விட்டால் அதுதான் அவருடைய முடிவு. ஆக உங்களிடம் சொல்லாமல் நாளைக்கு உங்களை சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தேன். பேச முடியாத தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆதலால் இந்த அன்பரையும் உங்களோடு அனுப்ப முடிவு செய்தேன். காளில் உங்களை ஏற்றுகின்ற வரை எனக்கும் சுவாமிகளின் நினைவுவரவில்ல. எப்படி உங்களை ஊருக்கனுப்புவது என்ற எண்ணம்தான் என் மனத்தில் மேலோங்கி நின்றது. தாங்கள் வண்டியில் ஏறிய பிறகு வண்டிக் கதவைத் தொட்டுக் கொண்டு, நீங்கள் சென்று வாருங்கள் என்று விடை கொடுக்க முயலும்போதுதான் சுவாமிகளின் எண்ணம் திடீரென்று மனத்தில் தோன்றிற்று. நாற்பது வருடங்களுக்குமேல் E. N. T. மருத்துவராக கொழும்பில் பணி செய்த எனக்கு அந்த விநாடி ஓர் எண்ணம் தோன்றிற்று. மருத்துவ உலகம் உதவ முடியாத தங்களுக்கு இறைவனின் அருள் ஒன்றுதான் உதவமுடியும். அப்படி யானால் அந்த அருளை வழங்கக் கூடிய இறைநேசர் சுவாமிகள் ஒருவராகத்தான் இருக்க முடியும், அதனாற் தான் பகலில் யாரும் சுவாமிகளிடம் செல்வதில்லை யென்று தெரிந்திருந்தும் தங்களைப் போகுமாறு பணித்தேன். சுவாமிகளே என் மனத்தில் அந்த எண்ணத்தைத் தோற்றுவித்திருக்க வேண்டும். இத்தகைய அற்புதங்கள் பலவற்றை பிறர் அறியாமல் ஒரு சிலருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/253&oldid=1285886" இலிருந்து மீள்விக்கப்பட்டது