பக்கம்:அருளாளர்கள்.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


244 அருளாளர்கள்

பன்முக நோக்கில்” என்ற நூலை எழுதினேன். திரு நாயுடு அவர்கள் தம் செலவில் அதை வெளியிட்டார்கள். அது 1997 பிப்ரவரியில் வெளியாயிற்று. சேக்கிழாரின் பெரியபுராணத்தை பக்தி அடிப்படையில் இல்லாமல் சமுதாய அடிப்படையில் காணவேண்டுமென்ற எண்ணம் மனத்தில் தோன்றியதுண்டு, அதற்கு வடிவு கொடுக்கத் தொடங்கி 1997 ஜூலையில் “சேக்கிழார் தந்த செல்வம்” என்ற நூலை வெளியிட்டேன்.

நூல்கள் எழுதும் பழக்கமுடைய நான் இவை இரண்டையும் எழுதியதில் என்ன புதுமை என்று பலர் தினைக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்த வரை யோகர் சுவாமிகள் இட்ட கட்டளை என்று ஒவ்வொரு விநாடியும் நினைக்கின்றேன். என்ன காரணத்தாலோ சென்ற நாற்பது ஆண்டுகளாக இவ்விருவரையும் தாண்டி வெளியே செல்ல முடியவில்லை. தொல்காப்பிய பொருளதிகாரத்திலுள்ள, மெய்ப்பாட்டியல், உவமவியல் என்ற இரண்டிற்கும் புதிய முறையில் பேராசிரியரிடம் மாறுபட்டு உரை எழுதும் எண்ணம் பல்லாண்டுகளாக இருப்பினும் ஏனோ எழுதமுடியவில்லை. தமிழ்த் தென்றல் திரு வி. க. அவர்கள் திருவாசகத்திற்கு என்னால் ஒர் உரையெழுதப் படவேண்டும் என்று பலமுறை என்னிடம் கூறியதோடு அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலும் இதனை எழுதியுள்ளார்கள். என்ன காரணத்தாலோ அதுவும் முடியவில்லை. எண்பது வயது பூர்த்தியாகும் போதும் இராமனைப் பற்றியும், சேக்கிழார் பற்றியுமே அடுத்தடுத்து இரண்டு பெரிய நூல்களை எழுதி வெளியிட முடிந்த தென்றால், அதன் உண்மையான காரணம் அ. ச. ஞா. என்ற தனி மனிதனுடைய முயற்சியோ, விருப்பமோ காரணமல்ல. எந்த விநாடி அந்த மகான் வாயைத் திறந்து ‘அந்த இருவரையும் வெட்டிப் புதைக்க வேண்டும் என்று சொன்னார்களோ அந்த விநாடியிலிருந்து அதே பணி என்னையும் அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது.