பக்கம்:அருளாளர்கள்.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சித்த யோகசுவாமிகள் 247

அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும் ஒரு டீக்கடை அங்கே இருந்தது. பார்த்தாயா மகனே, வேண்டுமானதைச் சாப்பிட்டுவிட்டு மேலே போகலாம்’ என்றார் அந்த சித்த புருஷர். இருவரும் உண்டுவிட்டு மேலே சென்றோம். மீண்டு வரும்பொழுதும் அதே டீக்கடையில் மறுமுறையும் சாப்பிட்டு விட்டு டீ குடித்து விட்டு கீழே வந்து விட்டோம். இதுவரையில் இல்லாத பெட்டிக்கடை அங்கே எப்படி வந்திருக்கும். அவ்வளவு பலகாரங்கள் அங்கிருந்தும் எங்களைத் தவிர வேறுயாரும் அங்கில்லையே, அக்கடைக்காரன் யாரை நம்பி இவ்வளவு பலகாரங்களையும், கடையையும் வைத்திருக்கிறான் என்ற எண்ணம் என் மனத்தை உலுப்பிக் கொண்டிருந்தது. சுவாமிகள் சிரித்துக் கொண்டே பார்த்தாயா மகனே, இந்த இடியப்பத்தையும் சொதியையும் சுமந்து செல்ல வேண்டிய வேலையே இல்லாமல் போய்விட்டது பார்த்தாயா?’ என்றார்கள். சுவாமிகளைக் கொண்டு போய் யாழ்ப் பாணத்தில் விட்டுவிட்டு கொழும்பு மீண்ட எனக்கு மனத்தில் அமைதி ஏற்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்து உற்ற நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சிவனொளி பாதம் போய்ச் சேர்ந்தேன். நண்பரிடம் இதைப்பற்றி ஒன்றும் நான் சொல்லவில்லை. டீக்கடை இருந்த இடத்தின் அடையாளம் நன்கு தெரிந்து வைத்திருந்தேன். அப்படி ஒருகடை அங்கிருந்த சுவடுகூடத் தெரியவில்லை. நான் சுற்றுமுற்றும் பார்ப்பதைப் பார்த்த நண்பர் என்ன பார்க்கிறீர்கள் என்று சொல்லிக் கேட்டார். இங்கு ஒரு டீக்கடை இருந்ததாக ஞாபகம், அதனாற்தான் அது எங்கே போய்விட்டது என்று தேடுகிறேன் என்றேன். நண்பர் சிரித்து விட்டு, இந்த இடத்தில் டீக்கடையா? முழுப் பைத்தியமாக இருந்தால் கூட இந்த இடத்தில் டிக்கடையைத் தேட மாட்டாய். மனித நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் எந்தப் பைத்தியக்காரன் டிக்கடை வைப்பான்? வா போகலாம் என்று அழைத்துப் போனார். அந்த நண்பரிடம் நடந்தது எதனையும் நான்