பக்கம்:அருளாளர்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

திருமந்திரம்-பொருள்நிலை * 13


திருமந்திரம்-பொருள்நிலை 21


பலரும் பெருஞ்செல்வர் வீட்டுப் பிள்ளைகள். செல்வத்தால் மட்டும் அமைதி அடைய முடியவில்லை என்பதனைக் கண்ட அவர்கள் பல்வேறு செயற்கை மருந்துகளைப் பயன்படுத்தி மன அமைதியைத் தேட முனைந்தனர். அவ்வழியிலும் அமைதி கிட்டாமற்போகவே நியூயார்க் நகரிலும், சிக்காகோ நகரிலும் தலையை மொட்டை அடித்துக் கொண்டு தெருவில் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு ஊர்சுற்றி வருகின்றனர்.

உலகில் எதனையும் காண்பதற்குப் புற நோக்கமோ, புறக்கருவிகளோ இன்றியமையாதவை அல்ல இக்கருத்தைத் திருமூலர் மட்டும் கூறினாரென்றில்லை; நவீன விஞ்ஞானமும் இதனை அறிவுறுத்துகிறது. ஒப்பியல் தத்தவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய மாபேரறிஞனாகிய ஐன்ஸ்டீன்'என்ற மேதை தொலைநோக்காடியால் (Telescope) அற்றை நாளில் காணமுடியாத ப்ளுட்டோ’ முடUTO) என்ற கோளின் இருப்பையும் தான்போட்ட கணிதத்தைக் கொண்டே நிலை நிறுவினார்

எனவே மனிதன் சிந்தனையை அகமுகமாகச் செலுத்துவதன் மூலம் உண்மைப் பொருளைக் காண முடியும் என்பதற்கு இஃது ஒர் எடுத்துக்காட்டாகும். அகமுக நோக்கம் ஆண்டவனை மட்டுமே அறிய உதவும் என்று தவறான எண்ணம் கொள்ள வேண்டா. அறிவை அகமுகமாகச் செலுத்துவதன் மூலமே புற உலக அறிவைக்கூட வளர்த்துக் கொள்ளலாம் என்பதையும், அவ்வறிவை இன்னும் ஆழமாகச் செலுத்துவதன் மூலம் மெய்ப்பொருளைக் காணவும் கூடும் என்பதையும் அறிதல் வேண்டும்.

சத்தியப் பொருளை, நித்தியப் பொருளை அறிதற்கு அகமுக நோக்கம் பயன்படுகிறது. அவ்வாறு உண்மைப் பொருளை அறிகின்ற முறையில் பல்வேறு