பக்கம்:அருளாளர்கள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருமந்திரம்-பொருள்நிலை . 23

அவன், அவள் அது எனும் அவை முநிலைமையின்

என்று ஆராயத் தொடங்குகிறார். இதிலிருந்து நாம் அறியவேண்டிய உண்மை ஒன்றுண்டு.

நம்முடைய முன்னோர்கள் காலத்துக்கேற்பத் தம் வழி முறைகளை மாற்றிக் கொண்டு உலகிற்கும் பயன்படு முறையில் ஆய்வு செய்ய அஞ்சியதில்லை. திருஞான சம்பந்தப் பெருமான் காலத்தில் பரவி இருந்த சைன சமயக் கொள்கைகள் அறிவை நம்பி இருந்தன. அறிவின் துணைகொண்டு மட்டும் எல்லாவற்றையும் ஆய்ந்து விட முடியாது: அஃது அனைவருக்கும் ஏற்ற வழியு மன்று; என்பதை வலியுறுத்துதற்காக ஞானசம்பந்தர் பக்தி மார்க்கத்தை வலியுறுத்தினார். ஆனால் 12 ஆம் நூற்றாண்டின் பின்னர் உள்ள தமிழகத்தில் மறுபடியும் சூழ்நிலை மாறிவிடுகிறது. அறிவை வலியுறுத்தி அதன்மூலம் மக்களுடைய பலவாகிய தேவையற்ற நம்பிக்கைகளைப் போக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுதலின் மெய்கண்ட தேவர் போன்றவர்கள் ஏதுக்களையும், எடுத்த மொழி யையும் கொண்டு பொருளின் உண்மையைச் சோதிக்கப் புகுந்தனர்.

சர்க்கரையின் இயல்பை நாவில் இட்டுக் காட்டும் திருஞானசம்பந்தரும், சோதனைக் குழாயில் போட்டு அதன் இயல்பை விளக்கும் மெய்கண்டாரும் இரண்டு வேறுபட்ட வழிகளை மேற் கொண்டார்கள், இவ்வாறு கூறுவதால் ஒருவர் வழி தவறு என்றோ மற்றொருவர் வழி சரியானதென்றோ கூறல் முடியாது. காலத்துக்கும் சூழ் நிலைக்கும் ஏற்ப நம் பெரியோர்கள் தாம் கூறும் வழிகளை மாற்றிக் கொண்டனர். திருஞானசம்பந்தர் கூறியதற்கு எதிராக மெய்கண்டார் கூறியதனால் நால்வர் வழியை மீறிவிட்டார் என்றோ அவர் சைவத்தை