பக்கம்:அருளாளர்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளாளர்கள்

34


34 அருளாளர்கள்

கொப்பூழிலிருந்து கணக்குப் பார்த்தால் கீழே மூன்று தொடும் இடங்களும், மேலே மூன்று தொடும் இடங்களும் இருப்பதை அறிய முடியும். இதையே ஆறு ஆதாரம் என்று கூறுவர்.

நடராஜப் பெருமான் ஆடும் கூத்தைப் பஞ்ச கிருத்தியத் (ஐந்தொழில்) தாண்டவம் என்பர். 1. வலக்கையிலுள்ள 'டமரூகம்' (உடுக்கை) படைப்புத் தொழிலைக் குறிக்கும். அனைத்துப் பொருட்களை ஆக்குவதற்கு மூலமாயும் இருப்பது (PRIMORDIAL SOUND) ஆதிநாதம் 2. தலையில் உள்ள கங்கை (தண்ணீர்) காத்தலை குறிக்கிறது

3. இடக்கையிலுள்ள அக்னி (நெருப்பு) அழித்தலைக்

குறிக்கிறது. 4. முயலகன் மீது ஊன்றிய திருவடி மறைத்தலைக் குறிக்கிறது. 5. தூக்கிய திருவடி உயிர்களுக்கு நல்கும் அருளலைக் (விடுதலை) குறிக்கிறது. பஞ்ச கிருத்தியம் என்று சொல்லப்படும் ஐந்து தொழில்களையும் அனாயாசமாகச் செய்யும் பரம் பொருள் ஓயாது சலித்துக்கொண்டே இருக்கிறது. சலித்தல் (Vibration) மிக வேகமாக நடைபெறும் போது, பொருள் நிலைத்திருப்பது போல் நமக்குக் காட்சியளிக்கும். வேகமாகச் சுற்றும் பம்பரத்தை உறங்குகிறது என்று சொல்வது மரபு. அதே போல, அண்டமுற நிமிர்ந்து ஆடும் ஐயன் திருநடனம் கற்பனைக் கெட்டாத வேகத்தில் நடைபெறுவதால், அவன் சலிப்பே (அசைவு)இல்லாமல் ஆடுகிறான் என்பதை, ஒரு குறிப்பிட்ட நிலையில் நடராஜ வடிவம் நமக்குத் தெரிவிக்கிறது. இந்த வடிவமும் இந்தக் கற்பனையும் மிகப் பழங்காலந்தொட்டே தமிழகத்தில் மட்டுமே தோன்றி வளர்ந்த சிறப்புடைய தத்துவமாகும்.