பக்கம்:அருளாளர்கள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவாசகங் காட்டும் திருநெறி 39

பேய் வடிவெடுத்துச் செல்லுங்கால் பிறர் அவ் வடிவத்தை உள்ளவாறு கூறக்கேட்டு யாது கூறினார்?

“அண்டர் நாயகனார் என்னை அறிவரேல்

அறியா வாய்மை எண்திசை மாக்களுக்கு யான் எவ்வுருவாய் என்?’’ (பெபு-1775)

என்று கூறினாரன்றோ! அதே நிலைமையை ஒவ்வொரு அன்பனுமடைகின்றான். இதனை ஆசிரியர், “சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப’ என்றும், “நாடவர் பழித்துரை பூண் அதுவாகக் கோணுதலின்றி’ என்றும் தொண்டர்கள் வாழ வேண்டிய வழி எத்தன்மைத்து என்றும் விளக்குகிறார்.

இத்தனை இன்னல்களையும் உயிர் மீறிச் செல்ல வேண்டுமானால் அவ்வாறு சென்று அடையும் பொருள் மிகவும் உயர்ந்ததாய் இருத்தல் வேண்டு மன்றோ! அப்பொருள் எத்தன்மைத்து? இன்னல்களைப் பொறுத் தார்க்குத் தக்க இன்பம் தரக்கூடியது, இறையேயாகும். அவ்வாறாயின் இறைவனை இத் தன்மையன் என்று கூறஇயலுமோ? மனநினைவிற்கு அப்பாற்பட்டதாய் இருந்தால் தானே அதனை மனிதனைவிடச் சிறந்தது என்று கூற இயலும். இதனை, நினைக்க இயலாததாய் எத்தன்மைத்து என்று விளக்குகிறார்:

“பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதலல்லாற் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை’ என்றும்,

“விச்சது இன்றியே விளைவு செய்குவாய், விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்’ (திருவாய்10,6)

என்றும், “கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்’ (திருவா:11,10) என்றும் கூறுகிறார்.