பக்கம்:அருளாளர்கள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவாசகங் காட்டும் திருநெறி 41

தலைவன் சக்தியுடையவனாய் இருத்தல் தெளித் தனம். எனினும் அவற்கு நம்மாட்டு அருளுண்டோ? நம் குறை முடிக்குந் தன்மை உடையனோ? என்ற ஐயங் கொண்டார்க்கு அதனைக் களையுமாற்றால் ஆசிரியர் கூறுகிறார்: இறைவன் “பால்நினைந் துட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து உயிர்க்கு அருள் செய்கின்றானென்றும், “குன்றே யனைய குற்றங்கள் குணமாமென்றே கொள்பவ னென்றும் கூறுகிறார். இத்தகைய பரங்கருணைத் தடங்கடலாதலின் உறுதியாக வேண்டுவார் வேண்டுவதே ஈவான் என்பது கருத்து.

வீடுபேறும் வேண்டுமென்றும் அதனை அடைய வேண்டுவது இன்றியமையாததென்றும், அதனைத் தருந் தலைவன் தரத்தக்க வன்மையுடையவன் என்றும், தருதற்குத் தடையின்றி அருளொடு நிறைந்திருப்பவ னென்றும் கேட்டபின்னர் மனமொன்றிக் கேட்பது ஒன்றே வேண்டற்பாலது. அவ்வாறு வேண்டுதற்கும் மனம் தானே முன்வருவதில்லை. மனமெனுங் குரங்கொன்று உடனிருத் தலின் அதனையடக்கி ஆளுதல் மனிதனுக்கு இயலாததா கின்றது. “ஒரு கணமேனுங் கண்மூடி மெளனியாயிருக்க வென்றால் இப் பாழ்த்த கன்பங்கள் போராடுதே!” என்று தாயுமான அடிகளும் கரைந்தாரன்றோ! ஆதலால், அம்மனத்தை அடக்கி வீடுபேற்றிற்குரிய வழியிற் செலுத்துதற்கும் அவனருளே வேண்டற் பாலதாகின்றது. அத்துணை வேண்டாது தானே அவ்வேலையில் ஈடுபடுவது எனப் புகுந்தால் ஆண்டு ஆணவ இருள் படரலின் மேற்செல்லல் இயலாதா கின்றது. ஆதலின், மணிமொழிப் பெருமான் “அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று கட்டளை இடுகின்றார். இதனையே தாயுமான அடிகளும்,

“அருளாலெவையும் பார் என்றான் அதனை அறியாதெனறிவாலே சுட்டிப் பார்த்தேன்;