பக்கம்:அருளாளர்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 அருளாளர்கள்

நினைப்பது போலப் பிறர் துயரத்தைக் காணாக் குருடர்களாகவும், கேளாச் செவிடர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. அதற்கு மறுதலையாக அனைத்துயிர் களிடத்தும் அன்பு செலுத்தும் மன நிலையை அவர்கள் பெற்றிருந்தனர்.

இவ்வகை மனநிலையை அடிப்படையிற் கொண்டு அவர்கள் பாடல்கள் இயற்றியமையால்தான் அப் பாடல்களைப் படிக்கும் அனைவருக்கும் சிறந்த முறையில் மன உருக்கத்தை அவை தந்தன. இவ்வகைப் பாடல் கட்குத் திருவாசகம்’ சிறந்த ஒர் எடுத்துக்காட்டாகும் திருவாசகம் இங்கு ஒருகால் ஒதின், கருங்கல் மனமும் கரைந்துருகக் கண்கள் தொடுமணற் கேணியின் சுரந்து நீர் பாய அன்பராகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இலரே என்று சிவப்பிரகாச அடிகளார் அருளிச் செய்ததில் நிறைந்த கருத்தாழம் உளது. திருவாசகம் உருகி உருகிப் பாடிய ஒரு பெரியாரின் அனுபவமே ஆகும். எனவே, அதைப் படிக்குந்தோறும் அப்பெரியார் அப் பாடல்களில் பெய்து வைத்துள்ள அனுபவம் நம்மையும் பற்றிக்கொள்கிறது.

இவ்வரும் பெரும் நூலின் உருக்கும் இயல்பைப் பற்றிக் கூற வரவில்லை இக்கட்டுரை. ஆனால், இத்தகைய அரிய பக்திப் பாடல்’களை இயற்றிய பெரியாரின் விஞ்ஞான அறிவைப்பற்றி ஒரளவு காண்பதே நோக்கம். ‘பக்திமான் கண்டது பிரசாதம் என்று கண்மூடித்தனமாகக் கதறும் இற்றை நாள் தமிழர்கள் அறிய வேண்டியது ஒன்றுண்டு. தமிழ்ந்ாட்டில் தோன்றிய பக்திமான்கள் இவ் ‘அறிவாளிகள் நினைப்பதுபோல் கல்வி வாசனை அற்றவர்கள் அல்லர். உதாரணமாக மாணிக்கவாசகர் ஒரு பெரிய அரசின் அமைச்சராக இருந்தவர் என்பதே சாலும்.