பக்கம்:அருளாளர்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவாசகத்தில் விஞ்ஞானம் 45

கையெழுத்து நாட்ட அறியாதவர்களும் தேர்தலுக்கு நின்று, தம்மை ஒத்த அறிவாளிகளின் வாக்குரிமையை மிகுதி யாகப் பெற்று விட்ட ஒரே காரணத்தால் அமைச்சராக வந்துவிடும் இயல்பு அறிவு வளர்ந்த இற்றை நாளில் காணப்பெறும் இயல்பு. இவர்கள் நினைப்பதுபோல ‘அறிவாளிகள்’ குறைந்த அந்த நாட்களில் விமானமும் நீர்மூழ்கிக் கப்பலும் அறியப்படாத அந்த நாளில், வாக்குரிமை பெற்று யாரும் அமைச்சராக வந்ததில்லை. தம் கல்வி, அனுபவம், அறிவு என்ற இவற்றையே துணையாகக் கொண்டு அவர்கள் அமைச்சர் பதவியை அடைந்தனர். எனவே, மணிவாசகர் அவரே கூறுவது போன்று கல்வி’ என்னும் பல்கடல் பிழைத்து வந்தவர் என்பதில் எள்ளளவும் ஐயத்திற்கிடமில்லை.

அடுத்துக் காண வேண்டிய உண்மையும் ஒன்றுண்டு. விஞ்ஞான அறிவு மெல்லக் கடவுள் உணர்ச்சியை மாய்த்துவிடும் என்று நம்மில் பலரும் மனப்பால் குடிக் கிறோம். இற்றை நாளில் விஞ்ஞானத்தின் தந்தையராக விளங்கும் பேராசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ராபர்ட் ஏ. மில்லிகன் போன்ற இரும்புத் தலைவர்கள் அனைவரும் ஒப்பற்ற பக்திமான்களாக விளங்கியதோடு தற்கால விஞ்ஞானம் சமய வாழ்க்கைக்குப் பெரிய அரணாக விளங்குகிறதென்ற கருத்தும் உடையவர்கள். ஆனால், விஞ்ஞானம் என்ற சொல்லின் எழுத்தைக் கூடக் கூட்டத் தெரியாத நம் ஊர் அறிவுவாதி மட்டுமே விஞ்ஞானம் சமயத்தையும் கடவுளையும் பொய்ப்பிக்கத் தோன்றிய மந்திரக் கோல்’ என்று நினைக்கிறான்; வாய்கூசாது பேசுகிறான். இது நிற்க, நம் நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த மணிவாசகர் போன்ற பெரியவர்களும் அற்றைநாள் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் விஞ்ஞான அறிவைப் பெற்றுத் திகழ்ந்தனர். அவர்களுடைய இந்த