பக்கம்:அருளாளர்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 அருளாளர்கள்

தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அது இவரை அனுபவிக்கத் தொடங்கிவிட்டதாம். மருந்தை நாம் உண்பதற்குப் பதிலாக மருந்து நம்மை உண்ணும் நிலை தோன்றி விட்டது.

 ஒரு சில காலம் இப்போராட்டம் நிகழ்ந்தது. மாயக் கவியாய் வந்தவன் ஆழ்வாரின் உட்புகுந்து கொஞ்சங் கொஞ்சமாக அவர் நெஞ்சின் உட்கலந்தான். தம்முடைய நெஞ்சில் பிறர் கலக்கிறார்கள் என்ற நினைவு ஆழ்வாரில் தோன்றிக் கொஞ்ச காலத்திற்கெல்லாம் தம் உயிரிலும் அம்மாயக் கவிஞன் கலத்தலை உணரத் தொடங்கினார் ஆழ்வார். தனியாக நின்ற தம்முன் அவன் வந்து கலப்பதைக் கண்டும் அதனைத் தடை செய்ய முடியாத நிலையில் இருந்தாராம் பெரியார். ஆனால் அவருள் இத்தகைய ஒரு கலப்பு ஏற்பட்டு அதனால் அவர் வேறுபாடு அடைவதை யாரும் அறியவில்லையாம்.
  இது வியப்பிலும் வியப்பு! தம்மிடம் நிகழ்கின்ற மாற்றத்தைக் காட்டிலும் தம் பக்கத்தில் இருப்பவர் மாற்றத்தை அறிந்து அதுபற்றிச் சுவையுடன் பேசும் இத்தமிழ்ச் சமுதாயத்தில், பெருமானிடம் தோன்றிய இப்பெருமாற்றத்தை அறிவார் ஒருவரும் இல்லாமற் போனது வியப்பிலும் வியப்பேயாகும். பிறர் விஷயத்தில் அவர் பேசுவதையும் அம்பல் துாற்றுவதையும் 

பிறப்புரிமையாகக் கொண்ட சமுதாயத்தில் ஆழ்வாருக்கு நேர்ந்த இப்பெருமாற்றத்தை அறிவார் ஒருவரும் இல்லாமற் போனார்கள். அம்மாயக் கள்வன் நின்றார் அறியா வண்ணம் ஆழ்வாரின் நெஞ்சினும் உயிரினும் உள் கலந்து’ விட்டானாம்.

 தத்தம் காரியங்களில் ஈடுபட்டு வேகமாக ஒடிக்

கொண்டிருக்கும் நேரத்திலுங்கூட, துரத்தில் யாரோ ஒருவருக்கு நிகழ்கின்றதைக் குறிப்பாகக் கண்டு குறை