பக்கம்:அருளாளர்கள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நம்மாழ்வார் 87

வருத்தத்தின் காரணம் மட்டும் வேறாக அமைந்து விடுகிறது. -

இனி அவர்கட்கும் நமக்கும் உள்ள மற்றொரு வேற்றுமையையும் அறிய வேண்டும். பொறிகளால் துன்பம் நேர்கையில் நாம் அவற்றைப் போக்கிக்கொள்ள நம்முடைய முயற்சியையே எதிர்பார்க்கிறோம். காடுகள் சென்று, கனசடை வைத்து, காற்றைப் பிடித்து அடைத்து, யோகப் பயிற்சிகள் மூலமும், உணவு வகைகளை பற்றி உதிர் சருகு தந்த மூலங்களேனும் அள்ளிப் புசித்து, மெளனம் மேற்கொண்டு பொறிகளை அடக்கப் பார்க்கின் றோம். ஐந்தையும் அடக்க வேண்டும், அடக்க வேண்டும்’ என்று ஓயாது கூவியும் முன்னர்க் கூறிய முயற்சிகளை செய்தும் நம் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள முயல் கிறோம். ஆனால் பயன் யாது என்பது ஆராய்ச்சிக் குரியதே யாகும்.

இதன் எதிராக இப்பெரியார்கள் மேற்கொள்ளும் வழியையும் சற்றுக் காண்டல் வேண்டும். ஒருவன் தன் பகையினை அழிக்க வேண்டுமாயின் அதற்குரிய வழிகளைக் கூறவந்த வள்ளுவனார்,

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியுந துக்கிச் செயல்.’

(குறள் - 471)

என்று கூறுகிறார். -

இடுக்கண் செய்யும் பொறி புலன்களை வெல்லக் கருதிய ஒருவன் முதலாவது செய்ய வேண்டியது யாது? தன் பகையாகிய அப்பொறி புலன்களின் வன்மையையும் தன் வன்மையையும் அளவிட்டு அறிதல் வேண்டும்.