உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

17

அருள்நெறி முழக்கம்


கருதிப் பிரார்த்தனை செய்வது கூடாது. ஆண்டவன் முன்னர் வழிபடுங்காலத்துக் கனவிலும் சுயநலம் தலைகாட்டக் கூடாது. எக்காலத்தும் நாம் ஆண்டவனாக வாழ்த்துதல் வேண்டும். அவனுடைய உண்மைப் பித்தனாக உள்ளம் தோய்ந்த பிரார்த்தனை செய்தல் வேண்டும். அவனை வாழ்த்துவது நாம் வாழத்தான் என்பதை இன்றைய மக்கட் சமுதாயம் மறந்து விட்டது. ஆண்டவனை யாரும் வாழ்விப்பது இல்லை. ஆண்டவனை வாழ்விப்பதாக எண்ணித் தனக்கே வாழ வழி வகுத்துக் கொள்கின்றான். அவனை வாழ்த்தினால்தான் நாம் வாழ முடியும். மனிதகுலம் ஆண்டவனை வாழ்த்துவதும் வழிபடுவதும் - வணங்குவதும் நாம் வாழத்தான். நம்முடைய வாழ்வின் வளம் குறித்துத்தான் என்பதை மறந்து ஆண்டவன் முன்னர்ச் சுயநலப் பாட்டுப்பாட முற்பட்டு விட்டோம். இதனை மாற்றி அமைத்து ஆலயங்களில் எங்குநோக்கினும் பல்வேறுபட்ட இன்னிசை முழங்கச் செய்ய வேண்டும். உண்மை அன்பர்களைக் காணுதல் வேண்டும். மக்கட் சமுதாயம் திருந்திவாழ முற்படல் வேண்டும்.

ஆலயங்களில் உள்ள நகைகளை விற்றுவிடுங்கள். திருஉருவங்களுக்கு நகைகள் எதற்கு? மக்கள் பஞ்சத்தால் பசியால் வாடுகின்ற இக்காலத்தில அவற்றால் நாட்டிற்கு எத்தனையோ நன்மைகள் செய்ய முடியுமே. அனேக மக்கள் வாழ்வதற்கு வழிகான முடியுமே. அவை அங்கு இருப்பதைவிட மக்கள் வாழ்விற்குப் பயன்தருவதுதான் நல்லது. ஆகையால் அவற்றை விற்றுவிடுங்கள். விற்றுவிட்டால் மக்கள் நலமுடன் வாழ முடியும் என்று சிலர் கூறுகின்றார்கள். புதுமையின் பெயரால் புரட்சிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு நாம் என்ன செய்கின்றோம் என்ன சொல்கின்றோம் என்றும் சிந்தித்துப் பாராமல் செய்ய முற்பட்டுவிட்ட காரணத்தால் அவர்கள் கருத்துப்படி ஆலயங்களில் உள்ள நகைகளை விற்றுவிட்டால், குறிப்பிட்ட காலத்திற்குத் தானே அவை பயன்படும். இந்தக் கருத்தையும் அவர்களே தானே கூறுகின்றார்கள்- ஏட்டிலும் எழுதுகின்றார்கள். அவர்கள் எழுதுகின்றபடி கூறுகின்றபடி ஆலயங்களில்