பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

19

அருள்நெறி முழக்கம்


நல்ல முறையில் செலவிட்டது. அதனால் மக்களும் நாடும் பயன் அடைந்தார்கள்(?). புறத்து நாகரீகம் என்ற ஒன்றிற்குக் கட்டுப்பட்டு வாழ்கின்ற இன்றைய மக்கட்சமுதாயம் சிறுகச் சிறுகக் கொடுக்கின்ற பண்பாட்டை மறந்து விட்டது. மக்கட் சமுதாயம் மறக்கத் தலைப்பட்ட காரணத்தால், அதனை வாங்கிப் பணி செய்கின்ற தொண்டர் குழாமும் மறந்துவிட்டது. அதனால்தான் மக்கட் சமுதாயம் நாளடைவில் கீழான நிலையை அடைந்தது என்பதை யாரும் மறுக்கவோ - மறக்கவோ முடியாது. இவ்வளவு அறுதி உறுதியிட்டுக் கூறக் காரணம் உண்டு. இன்றைய நாட்டின் நிலைமையை நாம் அனைவரும் கண்கூடாகக் காண்கின்றோம். கண்கூடாகக் கண்டும் விதண்டாவாதத்தால் மறுக்க யாரும் முற்பட மாட்டார்கள் என்றுதான் அவ்வளவு உறுதியிட்டுக் கூறினோம். மக்கட் சமுதாயம் கொடுக்கின்ற பண்பையும் தொண்டர்கள் வசூலித்து நல்ல முறையில் செலவிடும் பண்பாட்டையும் மறந்திருத்தால் - இருகூட்டத்தாரும் கடமை தவறாதிருந்தால் இன்று நாட்டில் சராசரியாகக் காண்கின்ற பிச்சைக்காரர்கள் கூட்டத்தைக் காணவே முடியாது. அந்த உயரிய திட்டத்தை மக்கட் சமுதாயாம் கடைப்பிடித்து வாழ முற்பட்டால்தான் வருங்காலச் சமுதாயம் நல்லதொரு முறையில் வாழ முடியும்.

வீட்டிற்கு ஒருபடி அரிசியும் ஒரு ரூபாயுங்கொடுத்தால் மதுரை நகரில் பிச்சைக்காரச் சகோதரர்களேயில்லாமற் செய்து விடலாம். “ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை சாதியில்” என்ற எடுப்பான சமுதாயத்தையுருவாக்க வேண்டும். உங்கள் வீட்டிற் சிந்துகின்ற அரிசியைக் கொடுங்கள்; சினிமாக் காட்சிக்குச் செலவிடும் பணத்தில் சிறிது செலவிடுங்கள். அருளுள்ளமுடைய பெருமக்கள் இத்திட்டத்தை நிறைவேற்றிப் பிச்சைக்காரர் பிரச்சினையைப் போக்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.

மனிதனாகப் பிறந்தும் நல்லறிவு படைத்தும் இறைவன் உண்டா இல்லையா என்ற ஐயப்பாடு ஏன்? ஆலயங்களில் உள்ள