பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னோர்கள் வாழ்ந்த நெறி


கண்ணார் நுதலோர் கழலிணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நாள்
நவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே.

அன்புடைப் பெருமக்களே!

நாட்டில் நல்லன பெருகி இன்பம் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள இளைஞர் உள்ளங்கள் முதலில் பழங்காலத் தமிழகம் எப்படி வாழ்ந்தது? இற்றைத் தமிழகம் எப்படி வாழ்கின்றது? நாளைத் தமிழகம் எப்படி வாழும்? என்ற மூன்று வினாக்களை எழுப்பி அந்த வினாக்களுக்கு நல்லதொரு முடிவைக் காண முற்பட வேண்டும். உங்கள் முடிவு நல்லதொரு முடிவாக இருக்குமேயானால், அறிஞர் பெருமக்களும், அருளுடைப் பெருமக்களும் ஒப்பத்தக்க முடிவாக இருக்குமேயானால் புனிதமான தமிழகத்தை - அன்பும் அறமும் கூடிய தமிழகத்தைக் காண முடியும்.

இன்றுள்ள வறுமைக்காட்சியைப் பார்க்கின்றபொழுது - நலிந்த தமிழகத்தைப் பார்க்கின்றபொழுது நம் கருத்து தடுமாற்றம் காண்கின்றது; நெஞ்சம் நெகிழ்கின்றது. பாரதி கண்ட பாரதநாடு -