தவத்திரு குன்றக்குடி அடிகளார்
33
அருள்நெறி முழக்கம்
அடிப்படையில்-அறத்தின் அடிப்படையில் பரவவேண்டும்.அந்தக் கொள்கைகளைப் பரப்புகின்ற தொண்டர்களும் தலைவர்களும் அன்பின் உருவமாகத்தான் மக்களிடங் கலந்து உறவாட வேண்டும்.
நம்முடைய வழிபாடு நெஞ்சம் கலந்த வழிபாடாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயம் பரிசுத்தமானதாக இருந்தால்தான்் ஆண்டவன் நமக்குக் காட்சி கொடுப்பான். நமது இருதயம் பரிசுத்தமாக இருந்தாலன்றி ஆண்டவனின் காதுகள் செவிடாக மாட்டா. பிரார்த்தனைதான் நம்மை எல்லாம் வாழ்விக்கும். இது வரலாற்றின் தத்துவம். நாம் எல்லோரும் பிரார்த்தனையைப் பின்பற்றி வாழ்வோமாக.
இளம் உள்ளங்கள் என்றென்றும் நல்லனவற்றைப் படித்துக் கேட்டு மகிழ்ந்தால்தான் தூய உள்ளமுடையவர்களாக வாழ முடியும். வருங்காலத் தமிழகத்தை உருவாக்கப் போகின்ற பொறுப்பும் கடமையும் உள்ள இளம் உள்ளங்கள் சமயத்தின் அடிப்படையில் வாழ வேண்டும். சமயம் வாழ்ந்தால்தான் மக்கட் சமுதாயமும், நாடு - நகரங்களும் நலங்காண முடியும். துள்ளித் திரிகின்ற பருவத்தில் கேட்கின்ற - படிக்கின்ற அனைத்தையும் அள்ளிப் பருகுகின்ற உள்ளம் படைத்த நீங்கள் நல்லனவற்றையே கேட்க வேண்டும். நாளைய சமுதாயத்தை உருவாக்கப் போகின்ற நீங்கள் நல்ல முறையில் பழக்கப் பெற வேண்டும். நீங்கள் எல்லோரும் எக்காலத்தும் உங்களது வருமானத்தை அறிந்து செலவு செய்தல் வேண்டும். எல்லோரும் தங்களது வருமானத்தில் சேமிப்பு நிதி என்று சிறிதளவு ஒதுக்கி வாழ்ந்தால்தான் நலம். அத்தகு வாழ்வினை வாழ நாம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நன்முறையில் வாழ வேண்டும்.
அண்ணல் காந்தி அடிகள் ஹரிஜன சேரியை - தாழ்த்தப்பட்ட மக்களின் காலணியைத் திருத்தப் பாடுபட்டார். அண்ணல் காந்தி அடிகள் செய்த அந்த அரும்பெரும் பணியை மேற்கொண்டு நடத்தி வெற்றி காணவேண்டியது நமது தலையாய கடமையாகும்.