பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

52

அருள்நெறி முழக்கம்


வேற்று மொழிக்காரருக்கு விட்டுவிட்டு வாளாவிருக்கின்றது. புத்துலகக் கவி பாரதி பாடியபடி நாமெல்லோரும் நாமமது தமிழரென வாழ்கின்றோமேயன்றிப் பண்டைத் தமிழகங்கண்ட உண்மைத் தமிழர்களாக ஒருவருமில்லை. இத்தகு இழிவு நிலைமையைப் போக்கிச் செங்குட்டுவன் கண்ட வீரத் தமிழகத்தை - இளங்கோவடிகள் கண்ட இன்பத் தமிழகத்தைக் காண இளைஞர்கள் முன்வரல் வேண்டும்.

வாழ்ந்து பெருமைப்பட வேண்டிய தமிழினம் இன்று தாழ்ந்து கிடக்கின்றது. பெருமையின் எல்லைக்கோட்டையே தமது இலட்சியத்தின் இருப்பிடமாகக் கொண்ட தமிழினம் இன்று சிறுமையின் அடிக்கோட்டில் நின்று விளையாடுவதேன்? அங்குதான் அருளுடைப் பெருமக்கள் நன்கு சிந்தித்து பார்த்தல் வேண்டும். நமது சிந்தனை நல்லதொரு முடிவைக் காண வேண்டும். நாம் காண்கின்ற முடிவு அறிவுடைப் பெருமக்களும் - அருளுடைப் பெருமக்களும் . ஏன் படித்தோர் முதல் பாமரர் வரை ஒப்பத் தக்கதாகவும் இருக்க வேண்டும். நமது முடிவில் நல்ல பல கருத்துக்களிருப்பதால் வாழ்ந்த தமிழினம் வீழ்ந்த காரணம் நன்கு தெரியும்.

தென்றல்காற்று வீசிய பூஞ்சோலையிலே எக்காரணத்தால் வாடைக்காற்று வீசிற்று என்பதை நன்கு சிந்தித்துப் பாருங்கள். சந்தன வியாபாரம் செய்துவந்த தமிழினத்தார் சாக்கடை வியாபாரியாக மாறியதேன்? மக்கள் மனதில் - நல்லன காணவேண்டியவிடத்தில் வேண்டாதன-ஒதுக்கப்பட வேண்டியன - வளர்க்கப்பட்ட காரணத்தால் நாட்டிலும் விரும்பாதன பல உண்டாகத் தொடங்கின என்பது நாடும் நல்லன்பர்களும் நன்கறிந்த செய்தி.

மனம் பொய்த்தது - மாரியும் பொய்த்தது. மாரி பொய்த்த காரணத்தால் வளமை இருக்க வேண்டிய இடத்தில் வறுமை தலைவிரித்தாடத் தொடங்கிற்று. பண்டைத் தமிழினம் வறுமை -