பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

62

அருள்நெறி முழக்கம்


கண்கள் நீர் மல்கும். இத்தகு நிலையை மாற்ற வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் தத்தம் கடமையை உணர்ந்து நடக்க வேண்டும்.

கருத்துவளம் எங்கு உண்டோ அங்கு வாழ்வும் வளம் பெறும் என்பதை உணர்ந்து வாழ முற்பட்டால் விரைவில் தமிழகத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தான் செய்கின்ற செயல் எத்தகையது என்பதை நன்கு சிந்தித்துப் பின் செயலில் முனைதல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன் குற்றத்தைத் தான் உணர்ந்த பின்னர் வாழ்வதை விட உயிர் விடுவதே மேல். அங்ஙனம் தன் உயிரைப் போக்கிக் கொள்வதிலும், உடலிலிருந்து உயிர் தானாகப் பிரிதல் எத்துணை விழுமியது என்பதை உன்னுங்கள். இதுவே தமிழகங்காட்டும் செந்நெறி. இத்தகைய முறையில்தான் பண்டைத்தமிழகம் வாழ்ந்து வந்தது என்பதை எல்லோரும் நன்குணர வேண்டும்.

நீதிக்கு முதலிடம் கொடுத்த நாடு நம் நாடு. குற்றத்தை உணர்ந்த பின் அவனையும் அறியாமல் உடலிலிருந்து உயிர் நீங்கிய வரலாற்றை இளங்கோ, பாண்டிய மன்னன் வாயிலாக உணர்த்துகின்றார்.

"யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்குத் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகனன் ஆயுள்என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே.”

என்பது சிலப்பதிகார அடிகள். இதன்மூலம் “மக்கட் சமுதாயம் குற்றம் நிகழ்கின்ற இடத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மையும், குற்றங்காண்கின்றவிடத்தில் அதனை விடுத்துக் குணத்தைக் காணும் பண்பாட்டையும் பெறுதல் வேண்டும்" என்பதை உணரலாம்.

அறக்கடவுள் முன்னிலையில் மாறுபட்ட செயல்கள் செய்கின்ற கூட்டம் விரைவில் அழிந்து விடும். இதனைத்தான்