உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

76

அருள்நெறி முழக்கம்


வாழ்வே தமது வாழ்வெனக் கருதி, தளராது தொண்டாற்றும் கழகத் தலைவர் ம.பொ.சி அவர்களை நெஞ்சங்கலந்த அன்போடு வாழ்த்துகின்றோம். கழகத்தின் சார்பில் நடைபெறும் இந்தத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நல்கிய திருவருளை நினைந்து வந்தித்து வாழ்த்திப் பணியில் மேற்செல்ல விழைகின்றோம்.

தமிழகத்தின் சிறப்பியல்புகள்

தமிழ் தன்னேரில்லாத தனிமொழி. தொன்மை நலஞ் செறிந்த தொன்மொழி. புதுமை நலம் பலவும் பூத்துப் பொலியும் புதுமொழி. பழமையும் புதுமையும் கலந்து களிநடம் பயிலும் ஒரே மொழி. இனிமைப் பண்பிற் சிறந்து விளங்கும் சீர்சான்ற மொழி. தண்ணளியின் தவைவெலாம் பெற்றொளிரும் பெருமொழி. கடவுட்சார்பு பெற்று, காலத்தொடுபடாத கன்னித் தமிழாகக் காட்சியளிக்கும் ஒரு தனிமொழி. இன்பத் தமிழில் இலக்கியங்கள் நிறைய உண்டு. தமிழ் வளர்த்த சங்கங்களுக்கு முன்னும் பின்னும் தமிழ்ப்பெருமக்களின் உணர்வுத் திறனிலிருந்து உருவெடுத்த இலக்கியங்கள் பல. தமிழகத்தில் தோன்றிய இலக்கியங்களிற் பல கிடைக்கவில்லை. அவ்வப்பொழுது எழுந்த கடல்கோள்களால் பல இலக்கியங்கள் கொள்ளப்பட்டன. தமிழர் பெட்புறப் பேணாமையின் காரணத்தால் கறையான்கள் ஒரு சிலவற்றைச் சுவை கண்டழித்தன, என்றாலும் நல்லூழின் காரணத்தால் ஒருசில இலக்கியங்கள் இருந்தன - இருந்து கொண்டிருக்கின்ற வளர்ந்து கொண்டுமிருக்கின்றன.

எது இலக்கியம்

அன்றாட வாழ்க்கை அல்லல் நிறைந்த வாழ்க்கை. துன்பச்சூழல் கவ்விடும் இடும்பையே நிறைந்த வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தளர்வு தலைகாட்டும். தளர்வாலும், துன்பத்தின் சூழலாலும் - இன்பத்தின்