தவத்திரு குன்றக்குடி அடிகளார்
78
அருள்நெறி முழக்கம்
தமிழிலக்கியம் காட்டும் நெறி
முன்னுரையில் குறித்தோம், தமிழர் இனம் அனைத்தும் ஒரு குலம் என்று. இந்தப் பரந்துபட்ட எண்ணம் தமிழினத்திற்கேயுரிய தனித்த இயல்பு. "யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்ற உயரிய நாகரிகம் தமிழர் நாகரிகம். இத்தகு புனித நாகரிக வாழ்க்கையினின்று தமிழர் நழுவினர். அதிலும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறி, "மகவெனப் பல்லுயிரையும் ஒக்கவே பார்க்கும்” பண்பினை நல்கும் சமயத்தின் போரால் குறுகிய பல சாதிப் பிரிவுணர்ச்சிகளையும், வகுப்புவாத உணர்ச்சிகளையும் கற்பித்துக் கொண்டனர். சமயநெறிக்குச் சாதிப்புன்மை உடன் பட்டதல்ல. மக்களினம் அனைத்தும் ஓரினம். அந்த இனத்தில் தமிழர் ஓர் குலம் என்ற பேருண்மையை வலியுறுத்துகின்றன தமிழ் இலக்கியங்கள்.
“பெரியோரை வியத்தலும் இலலே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
என்று கூறி, உயர்வு தாழ்வுப் புன்மைகளைப் புறக்கணிக்கிறது தமிழிலக்கியம். ஒரு நாட்டு மக்களது வாழ்க்கையில் இன்பமே பொருந்தி விளங்க அமைதி நிலவும் சூழ்நிலை தேவை. அமைதியும் ஓரிடத்திலிருந்து பூரண இன்பத்தைக் காண முடியாது.
மக்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்பம் பொலிவதற்கு, வீடு, ஊர், நாடு முதலிய மூன்றிடங்களிலும் அமைதி நிலவ வேண்டும். நிறைந்த அறிவும், ஒப்புரவுப் பண்பாடும், கடமையாற்றும் உணர்ச்சியும் உள்ள மக்களினம் வாழ்தலே அமைதிக்குக் காரணம். இல்லத்தில் அமைதி நிலவ, வாழ்க்கைத் துணைவியும், மக்களும், ஏவலாளர்களும், அறிவுநலம் நிறையப் பெற்றவராய், குறிப்பறிந்து செயலாற்றும் திறமுடையராயிருத்தல் வேண்டும்.
ஊரில் அல்லது நகரத்தில் அமைதிநிலவ ஆன்றவிந்தடங்கிய சால்புடைப் பெருமக்கள் பலர் வாழ்தல் வேண்டும். நாட்டில் அமைதி நில அரசியல், அறத்திற்கு மாறுபட்டன செய்யாத